எண்டு கார்டே இல்லாத பொன்னியின் செல்வன்.. மணிரத்தினம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் லைக்கா

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீசான பாகம் ஒன்றை தொடர்ந்து, பாகம் இரண்டிற்கான ரிலீஸ் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் பிரம்மாண்டமாக ரிலீசான நிலையில், 500 கோடி ருபாய் பொருட்செலவில் லைக்கா இப்படத்தின் இரண்டு பாகங்களையும் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே 1000 கோடி வரை பாகம் 1 வசூலான நிலையில், இரண்டாம் பாகம் வெளியானால் மேலும் 1000 கோடி வரை வசூலாக அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.

Also Read: விடாமல் வட்டமிடும் ருசி கண்ட பூனை.. பொன்னியின் செல்வன்-2 மொத்தத்தையும் வாரி தின்னும் லைக்கா

இதனிடையே பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு புது ட்ரீட் கொடுக்கும் வகையில் மணிரத்னம் புதிய பிளான் ஒன்றை போட்டுள்ளார். ராஜ ராஜ சோழன் ஆட்சி பொறுப்பில் வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்களை மையமாக வைத்தே பொன்னியின் செல்வன் நாவல் இயற்றப்பட்டிருக்கும். அதனை தழுவி தான் மணிரத்னம் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருப்பார்.

ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த மணிரத்னம் இப்படத்தை மேலும் 3,4 பாகங்களாக உருவாக்க திட்டம் தீட்டியுள்ளார். அந்த பாகங்களில் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் வந்த பின் அவர் செய்த ஆட்சி, தஞ்சை கோவிலை எப்படி காட்டினார், உலகளவில் பல சிவன் கோவில்களை எப்படி நிறுவினார் என்பதை படமாக எடுக்க மணிரத்னம் யோசித்துள்ளாராம்.

Also Read: மறுபிறவி எடுத்து வரும் அருண்மொழி வர்மன், திருப்பி அடிக்கும் சோழ சாம்ராஜ்யம்.. பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

மேலும் ராஜ ராஜ சோழன் எப்படி இறந்தார்,  அவரது மறைவுக்கு பின் அவரது மகனின் ஆட்சி காலம் எப்படி இருந்தது, உள்ளிட்ட கதையோடு தமிழக மக்களின் ஒரு வாழ்வியலாகவே பொன்னியின் செல்வன் கதையை எடுக்க மணிரத்னம் திட்டம் தீட்டியுள்ளார். மேலும் இந்த 3, 4 பாகங்களை தயாரிக்கவும் லைகாவை மணிரத்னம் அணுகிய நிலையில் லைகா நிறுவனம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இப்படத்தின் மூலமாக மார்க்கெட் எகிறியுள்ள நிலையில், கூடுதலாக 3, 4 பாகங்கள் வந்தால் கட்டாயம் அவர்கள் திரையுலகில் கொடிக்கட்டி பார்ப்பார்கள். அதிலும் நடிகர் ஜெயம் ரவி தான் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்தவர். மற்ற கதாபாத்திரங்களை காட்டிலும் அடுத்தடுத்த 3, 4 பாகங்களில் ஜெயம்ரவி முதன்மை கதாபாத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:அண்ணனும் கைவிட்டாச்சு, நம்பிய படமும் கோவிந்தா.. பொன்னியின் செல்வன் 2 தான் நம்ம அஸ்திவாரம்

- Advertisement -