Videos | வீடியோக்கள்
மறுபிறவி எடுத்து வரும் அருண்மொழி வர்மன், திருப்பி அடிக்கும் சோழ சாம்ராஜ்யம்.. பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்
ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த இந்த இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என ஆரவாரமான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருந்தது.
பல ஜாம்பவான்களின் கனவு காவியமாக இருந்த பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்தினத்தின் பெரும் முயற்சியால் திரைப்படமாக மாறி இருக்கிறது. கடந்த வருடம் வெளியான இதன் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்த்தது.
மேலும் முதல் பாகம் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுடன் முடிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
Also read: ரஜினிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்த மணிரத்தினம்.. கமலுக்கு கிடைத்த கௌரவம்
அது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக இந்த திரைப்படம் பற்றிய விவாதம் தான் சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த இந்த இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என ஆரவாரமான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருந்தது.
அதைத்தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மணிரத்னம், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களுடன் பட குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் ரேவதி, ஷோபனா, சுஹாசினி உட்பட 80 காலகட்ட நடிகைகளும் இதில் பங்கேற்றுள்ளது பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் விழா அரங்கமே தற்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி திருவிழா போல் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்தில் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் பலரும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் முழுக்க முழுக்க எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சூழ்ச்சி, வஞ்சகம் போன்ற அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
