நயன்தாராவை போல் சிம்புவை வெறுத்து ஒதுக்கிய 2 நடிகர்கள்.. பொன்னியின் செல்வன் வாய்ப்பு பறிபோன காரணம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் அரை நூற்றாண்டு காலமாக இந்த திரைப்படத்தை எடுக்க முயன்று இன்று வரை எடுக்க முடியவில்லை. அதனை மணிரத்தினம் பதினைந்து வருடமாக போராடி ஒருவழியாக படத்தை முடித்து விட்டார். படத்தின் டீஸர் பிரம்மாண்டமாக நடத்தப்படாமல் எளிமையாக நடத்தி முடித்தார் மணிரத்தனம். ஆனால் இந்தத் திரைப்படம் உருவாவதற்கும் இதில் நடிக்க பல பேரிடம் முயற்சி செய்திருக்கிறார்.

இந்த திரைப்படம் பத்து வருடங்களுக்கு முன்பே விஜய்யிடம் பேசப்பட்டது. விஜய் இதில் நடிக்க நிறைய நாட்கள் தேவைப்படும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். இது திரைப்படம் தற்போது உருவாகும் காலகட்டத்தில் நயன்தாரா ,சிம்பு, விக்ரம், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் உறுதி ஆனார்கள். ஆனால் கடைசியில் நடந்தது வேறு

சிம்பு மணிரத்தினத்தின் ஆசையால் நடிக்க வந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில் நயன்தாரா சிம்பு வந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதை எதிர்பார்க்காத மணிரத்தினம் சிம்புவிடம் தெரிவித்தார். சிம்பு விலகிவிட்டார் பின்னர் நயன்தாராவும் நடிக்கவில்லை, நயன்தாரா போனாலென்ன சிம்புவை வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார் மணிரத்னம், அடுத்த பிரச்சினை ஆரம்பம்.

சிம்பு நடித்தால் மற்ற கதாநாயகர்கள் நடிக்க மாட்டோம் என்று கூறி விட்டனர். அதாவது சிம்பு நடித்தால் விக்ரம், ஜெயம் ரவி போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்க மாட்டோம் என்று மணிரத்னத்திடம் கூறிவிட்டனர். இதை எதிர்பார்க்காத இயக்குனர் சிம்புவிற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று தெரியாமல் கடைசியில் சிம்புவை நடிக்க வைக்கவில்லை.

தற்போது இந்த தகவல் வெளிவந்துள்ளது. சிம்புவை வைத்து எடுத்த பொன்னியின் செல்வனின் போட்டோக்கள் இன்றும் இருக்கிறது. சிம்புவின் நடத்தை பிடிக்காமல் மற்ற ஹீரோக்கள் அவர்களை ஒதுக்கி உள்ளனர்.

சிம்புவை எதிர்ப்பவர்கள் நிறைய பேர் சினிமாவில் இருக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறது. இதனால் தான் சிம்பு நிறைய வருடங்கள் நடிக்காமல் இருந்திருக்கிறார். ஆனால் இப்போது சிம்புவின் ஏறுமுகம் தொடங்கிவிட்டது சிம்புவும் மாறிவிட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -