ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் மணிரத்தினம்.. 500 கோடி வசூல் போதாது, ஏப்ரல் 28 நடக்கப் போகும் சம்பவம்

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல உலக அளவில் 500 கோடி வசூலையும் வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் நடித்த விக்ரம், ஐஸ்வர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்டோருடன் இயக்குனர் மணிரத்தினமும் முக்கிய நகரங்களில் பட புரமோஷனை படு ஜோராக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எகிறி கொண்டு இருக்கிறது.

Also Read: பொன்னியின் செல்வனில் கம்மி சம்பளம் வாங்கிய 5 பேர்.. படம் முழுக்க வந்த ஜெயராமுக்கு இவ்வளவு தான் சம்பளமா!

இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க மணிரத்தினம் பலே திட்டம் போட்டு இருக்கிறார். அதாவது பார்த்திபன் மணிரத்தினத்திடம் ஒரு யோசனை கூறியிருக்கிறார். அதாவது பொன்னியின் செல்வன் வெளியிடும் தேதி அன்று பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெளியிட வேண்டும்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கு பார்க்க வாய்ப்பு கிடைக்கும். அதை பார்த்தவுடன் இரண்டாம் பாகத்தை உடனே பார்க்க ஆசைப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு மகிழ்ச்சி நமக்கும் முதல் பாகத்தை வெளியிட்டு மீண்டும் ஒரு வசூல் வேட்டையை நடத்தலாம்.

Also Read: திரிஷா இல்லைனா நயன்தாரா.. அடுத்த கதாநாயகியை லாக் செய்த மணிரத்தினம்

அதோடு இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு வசூல் வேட்டையை சேர்ந்து நடத்தலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் தயாரிப்பாளரும், மணிரத்தினமும் நல்ல யோசனையாக இருக்கிறது என்று சரி சொல்லி இருக்கிறார்கள். நான்கு தியேட்டர்கள் ஆறு தியேட்டர்கள் உள்ள இடத்தில் இரண்டு பாகத்தையும் வெளியிட முடிவு.

முதல் பாகத்திற்கு வசூலான 500 கோடி எல்லாம் பத்தாது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே சமயத்தில் திரையிட்டு 1000 கோடிக்கு மேல் இந்த முறை வசூலை தட்டி தூக்க வேண்டும் என வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கின்றனர்.

Also Read: திரிஷா விஷயத்தில் அலர்ட் ஆறுமுகமாயிருக்கும் விக்ரம்.. முத்துன கத்திரிக்காய்க்கும் மவுஸ் குறையல!

Next Story

- Advertisement -