முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் மண்ணை கவ்விய பொன்னியின் செல்வன் வசூல் ரிப்போர்ட்.. தலைசுற்றிப்போன மணிரத்தினம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் குவிந்தது மட்டுமின்றி 500 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் ஆனது. இதனை தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற விட்டது.

ஆனால் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வசூலில் மண்ணை கவ்விய இருக்கிறது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த முழு வசூல் ரிப்போர்ட்டை பார்த்ததும் மணிரத்தினம் தலை சுற்றிப் போய் கிடக்கிறார்.

Also Read: வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதா?. முடியவே முடியாது என ஒத்த காலில் நிற்கும் விக்ரம்

ஏற்கனவே பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் கல்கி எழுதிய நாவலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டிருப்பார். ஆனால் மணிரத்தினம் படத்தில் ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொள்வது போல் காட்டி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் மணிரத்தினம் இஷ்டத்திற்கு ஏற்ப கதையை மாற்றி அமைத்திருக்கிறார் என நெகட்டிவ்வான விமர்சனங்கள் நாலா பக்கமும் கிளம்பியது.

இதனால் இரண்டாம் பாகத்திற்கு தமிழகத்தில் மொத்தமாகவே 120 கோடி மட்டுமே வசூல் ஆனது. ஆனால் முதல் பாகத்திற்கு 210 கோடிக்கு மேல் வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனால் படக் குழுவினர் இரண்டாம் பாகத்திற்கு 300 கோடிக்கு மேல் வசூல் கிடைத்திருப்பதாக தெரிவித்து படத்தை மேலும் ப்ரோமோட் செய்தனர். ஆனால் இதுவரை இரண்டாம் பாகத்திற்கு மொத்தமாகவே 350 கோடி ரூபாய் கூட நெருங்கவில்லையாம்.

Also Read: குந்தவை போல குடும்பத்தை சந்திசிரிக்க வைத்த நந்தினி.. வெட்ட வெளிச்சம் ஆக்கிய பயில்வான்

அது மட்டுமல்ல இந்திய அளவில் பொன்னியின் செல்வன் வசூலில் பயங்கர அடிவாகிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது வெளிநாடுகளில் மிகவும் மோசமான வசூலை பெற்றிருக்கிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அமெரிக்காவில் மட்டும்தான் 45 கோடி வசூலித்திருக்கிறது. மற்ற எந்த வெளிநாடுகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூல் ஆகவில்லை.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையரங்கில் தான் ஓடுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ப்ரோமோஷனல் பக்கவாக பிளான் போட்டு செய்த மணிரத்தினத்திற்கு இந்த வசூல் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. எது எப்படியோ அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற அவரது திரைக்கனவு மட்டும் நிறைவேறியது என்ற திருப்தியில் இருக்கிறார்.

Also Read: அருள்மொழி வர்மனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதுவரை இல்லாத அளவிற்கு 5 பெரிய பட்ஜெட் படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்