300 படங்களில் நடித்து எம்ஜிஆர், சிவாஜி ஆட்டிப்படைத்த வில்லி.. தூள் சொர்ணாக்காவையை மிஞ்சும் நடிப்பு

இன்றைய காலத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு வில்லியாக நடிக்கும் திறமை வாய்ந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணன், வரலட்சுமி சரத்குமார் என பல நடிகைகள் உள்ளனர். ஆனால் 60 கால கட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என்ற மூன்று பெரும் நடிகர்களுக்கு வில்லியாக நடித்த பெருமை என்றால் பழம்பெரும் நடிகை எம்எஸ் சுந்தரி பாய் அவர்களையே சேரும் மதுரையில் பிறந்த நடிகை எம்.எஸ். சுந்தரி பாய் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகையாக வலம் வந்தார். பின்னர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர் கிட்டத்தட்ட 300 திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். இவரது நடிப்பில் வெளியான சிறந்த ஐந்து படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

பொம்மை கல்யாணம் : 1958 ஆம் வருடம் சிவாஜி கணேசன், ஜமுனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பொம்மை கல்யாணம் திரைப்படம் அந்த ஆண்டு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் பெருந்தேவி என்ற வில்லி கதாபாத்திரத்தில் எம். எஸ். சுந்தரி பாய் தனது நடிப்பை அற்புதமாக நடித்திருப்பார்.

Also Read : நாகேஷ், சிவாஜியுடன் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரோட முடிந்து போன சகாப்தம்

சம்சாரம் : 1951ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புஷ்பவல்லி எம். கே.ராதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சம்சாரம் திரைப்படத்தில் எம்.எஸ். சுந்தரி பாய் முதன்முதலாக வில்லி கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இத்திரைப்படத்தின் மூலமாக இவருக்கு தொடர்ந்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சில நேரங்களில் சில மனிதர்கள் : 1970 ஆம் ஆண்டு நடிகை லட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படத்தில் சுந்தரி பாய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் லக்ஷ்மி பெற்றார். இதனிடையே சுந்தரி பாய் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Also Read : 250 படங்களில் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர்.. ப்பா தமிழ் சினிமாவில் இதுவரை உடைக்கப்படாத சாதனை

சந்திரலேகா : 1948-ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட சந்திரலேகா திரைப்படத்தில் சுந்தரிபாய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர்கள் டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா உள்ளிட்டோர் நடித்து இருப்பார். இத்திரைப்படத்தில் சொகுசு என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுந்தரிபாய் பலராலும் பேசப்பட்டார்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் : காதல் மன்னன் ஜெமினி கணேசன், பத்மினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் சுந்தரிபாய் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 1958ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருந்தது. சந்திரலேகா திரைப்படத்திற்குப் பின் பத்து வருடங்கள் கழித்து சுந்தரிபாய் நடிப்பு பெரிய அளவில் இத்திரைப்படத்தின் மூலமாக பேசப்பட்டது.

Also Read : சாம்பார் என ஜெமினிக்கு பெயர் வந்ததன் ரகசியம்.. பல வருட ரகசியத்திற்கு கிடைத்த பதில்

- Advertisement -