ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குணசேகரனுக்கு சரியான ஆளு ஜான்சி ராணி தான்.. அப்பத்தாவின் சொத்தை ஆட்டை போட்ட செம ஸ்கெட்ச்

ஒவ்வொரு நாளும் என்ன நடக்க போகுது என்று விறுவிறுப்பாக கதையை நகர்த்திக் கொண்டு போகும் சீரியலில் எதிர்நீச்சலுக்கு இணையாக இப்பொழுது வரை எந்த சீரியலும் போட்டி போட முடியாது. முக்கியமாக இந்த சீரியலின் கதாநாயகியாக பார்த்து ரசிக்கக்கூடிய கேரக்டர் என்றால் அது நம்ம அப்பத்தாவின் கேரக்டர் தான்.

இதுவரை அண்ணன் என்று நம்பிகிட்டு இருந்த ஜான்சி ராணிக்கும் அப்பு வச்சுட்டாரு நம்ம குணசேகரன். அதாவது அப்பத்தா நேற்று மாஸாக என்டரி கொடுத்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் குணசேகரன் இடம் ஆதிரை திருமணத்தைப் பற்றி பேசியபோது, இதுதான் கிடைத்த சான்ஸ் என்று உடனே ஒரு பிளான் போட்டாரு பாரு. அப்பப்பா இவர மிஞ்சும் அளவுக்கு ஆறும் கிடையாது.

Also read: ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடிய குணசேகரன்.. ஆம்பளைங்களே இல்லையா என அசிங்கப்படுத்திய மருமகள்

ஆதிரையின் எதிர்காலத்தை நினைத்து அப்பத்தா குணசேகரன் இடம் இந்த கல்யாண ஏற்பாட்டை உடனே நிறுத்திவிடு. என்று சொல்லியதை கேட்டு எப்போதும் போல ஆவேசமாக கொந்தளிப்பார் என்று எதிர்பார்த்தால், ரொம்ப நல்லவன் மாதிரி நீ சொல்ற மாதிரி இந்த கல்யாணத்தை நான் நிறுத்துறேன். ஆனா அதுக்கு பதில் நீ எனக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார்.

இவர் என்ன பெருசா கேக்க போறாரு அதுவும் அப்பத்தா கிட்ட ஒரே ஒரு விஷயம் அந்த 40% ஷேர் மட்டும் தான். அதை ஆட்டைய போடணும் தான் இவ்ளோ நாளா துடிச்சிட்டு இருக்காரு. இப்போ அதுக்கு ஏத்த மாதிரி ஆதிரையின் கல்யாணத்தை நல்லா பகடைக்காயாக யூஸ் பண்ணிக்கிறார். இவரை மாதிரி ஒரு ஆள் மட்டும் குடும்பத்துல ஒருத்தர் இருந்தா போதும் குடும்பம் சூப்பரா உருப்படும்.

Also read: பூமர் அங்கிளையே பொளந்து கட்டிய வில்லங்கமான பார்ட்டி.. எதிர்நீச்சலில் அண்ணனை காப்பாற்றுவாரா தம்பி?

சொந்த தங்கச்சியின் வாழ்க்கையை பற்றி யோசிக்காம அந்த நேரத்திலும் சொத்தை தான் பெருசாக நினைச்சு அப்பத்தாவை மடக்க நினைக்கிறாரு. ஆனா அப்பத்தா இந்த சொத்தை ஏற்கனவே பிளான் பண்ணி ஏதோ செய்து வச்சிட்டாங்க. அதனால கண்டிப்பா அப்பத்தா இந்த டீலுக்கு ஓகே சொல்ல முடியாது. ஆனாலும் இதில் ஆதிரையின் வாழ்க்கை இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று அப்பத்தா கையில் தான் இருக்கிறது.

இதற்கு இடையில் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியை, கதிர் வீட்டை விட்டு அடிச்சு வெளியில துரத்தி விடுறாரு. ஆனா ஜான்சி ராணி என்ன சும்மா புள்ள பூச்சியா வெளியில் துரத்தின பிறகு ஓரமா ஒதுங்குறதுக்கு. அடிபட்ட பாம்பு சும்மாவா விடும் இனி குணசேகரின் அலறல் சத்தம் மட்டும் கேட்கும் என்று வாய் சவடால் விடும் நம்ம ஜான்சி ராணி தான் குணசேகரனுக்கு சரியான ஆளு.

Also read: 40% ஷேர்க்கு ஆதிரையை அடமானம் வைக்கும் குணசேகரன்.. அப்பத்தாவின் முடிவு என்னவாக இருக்கும்

- Advertisement -

Trending News