எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா.? மேடையில் விஜய்யை கிழித்த பயில்வான்

பயில்வான் ரங்கநாதன் மூத்த பத்திரிகையாளரும், நடிகரும் ஆவார். இவர் சமீபத்தில் வலையொலி சேனல்களில் தன்னுடைய திரை பயணத்தையும், தனக்கு தெரிந்த சினிமாவை பற்றியும் பகிர்ந்து வருகிறார். ஆனால் இவர் பேசுவது எல்லாமே சர்ச்சைக்குரிய கருத்துகள்தான். இதனால் இவருக்கு பல எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

அப்படி தற்போது ரங்கநாதன் பேசிய சர்ச்சை கருத்து நடிகர் விஜய் பற்றியது. அதாவது ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மறுபக்கம் விஜய்யின் ஆதரவாளர்கள் என்று ஆளாளுக்கு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வருகிறார்கள். இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.

Also Read: மனதில் ஒன்றை வைத்து கொண்டு நெல்சனை பாடாய்படுத்தும் சூப்பர் ஸ்டார்.. செய்வதறியாமல் திணறும் நெல்சன்

இது பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன், எப்போதுமே நான்தான் அடுத்த மக்கள் திலகம், அடுத்த நடிகர் திலகம் அடுத்த உலக நாயகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் பட்டமும் அது ரஜினி ஒருவருக்கு தான் பொருந்தும். அந்த பட்டத்தையே இப்போது திருடுகிறார்கள். எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அடுத்த எம்ஜிஆர், சிவாஜி, கமல் என்ற பேச்சுக்கு வந்ததே. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட்டத்தின் மீது மட்டும் எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. பாபா பட தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் இனி நடிக்கப்போவதில்லை, கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று சினிமா வட்டாரங்களிலேயே வதந்தி எழுந்தது.

Also Read: தளபதி 67ல் உறுதியான 6 கேங்ஸ்டர் நட்சத்திரங்கள்.. ஆக்சன் கிங் அர்ஜூனுடன் இணையும் வில்லன்

சூப்பர் ஸ்டார் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த நேரத்தில் கூட, விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். என்னதான் விஜய்யின் படங்கள் ஹிட் கொடுத்தாலும், கோடிக்கணக்கில் வசூல் செய்தாலும், ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் காலகட்டத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு தான்.

ஆனால் இது போன்ற விஷயங்கள் விஜய்க்கு எதிரான சர்ச்சை கருத்துகளாக மாறுவதற்கு காரணம் இதுவரை விஜய், இந்தப் பிரச்சினையைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பதுதான். அவர் மட்டும் ஏதாவது ஒரு மேடையில் சென்னை சூப்பர் ஸ்டார் என்று கூற வேண்டாம், ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்று ஏதாவது ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எந்த சர்ச்சையும் அவருக்கு வராது.

Also Read: கண்ணை கூச வைக்கும் கிளாமரில் விஜய்யின் அண்ணன் மகள் ரியா.. பட வாய்ப்புக்காக இறங்கிய 18 வயசு அம்மணி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்