சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிய மனைவி.. பார்த்திபன் கூறிய பதில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கதை மூலம் வித்தியாசமான படங்களை வழங்கி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் பார்த்திபன். அவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

சமீபத்தில் இவரே இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு படம் மாபெரும் வெற்றி பெற்றது. பலரது விமர்சனங்களையும், பாராட்டையும் பெற்ற ஒத்த செருப்பு படம் பல விருதுகளை வாரி குவித்தது. இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே. இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வெளிவருவது மிகவும் அரிதான ஒன்று.

இயக்குநர் பார்த்திபன், கடந்த 1990ஆம் ஆண்டு நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

பல போராட்டங்களுக்குப் பின் நடைபெற்ற இவர்களது காதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷை நடிகை சீதா திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்விலும் கசப்பு ஏற்பட, அவரையும் பிரிந்து விட்டார்.

parthiban-daughter-marriage
parthiban-daughter-marriage

இந்நிலையில் தான் தனது மகள் திருமணம் நடந்த போது, பார்த்திபனுடன் சேர்ந்து வாழ சீதா விருப்பம் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. போனது போகட்டும், இருவரும் இனி வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என கூறிய சீதாவிடம் பார்த்திபன், பிரிந்தது பிரிந்தது தான், இனி ஒட்டி வாழ விருப்பமில்லை என கூறி ஒதுங்கி விட்டாராம்.

- Advertisement -

Trending News