சீதாவுடனான விவாகரத்து, 20 வருஷத்துக்கு பிறகு காரணத்தை சொன்ன பார்த்திபன்.. மகளா இருந்தாலும் அப்படி தானா?

Parthiban – Seetha divorce: முதல் படமே ஹிட்டாகி, படத்தின் ஹீரோயினும் செட்டாவது என்பது ஒரு சில இயக்குனர்களுக்கு தான் நடக்கும். இந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் இயக்குனர்கள் விக்னேஷ் சிவனும், சுந்தர் சி யும். இவர்களுக்கு முன்னாடியே இந்த விஷயத்தில் பிள்ளையார் சொல்லி போட்டவர் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்.

புதியபாதை என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பார்த்திபன் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போவே சீதா 25 படங்களுக்கு மேல் நடித்த முன்னணி நடிகை.

குறுகிய காலத்திலேயே பிரபு, கமலஹாசன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருந்தார். பார்த்திபனை காதலிப்பதாக முதலில் சீதா தான் சொல்லியதாக பல மேடைகளில் பார்த்திபன் சொல்லி இருந்தார். கிட்டத்தட்ட 11 வருட வாழ்க்கைக்கு பிறகு, இந்த ஜோடி விவாகரத்து செய்து கொண்டது.

காரணத்தை சொன்ன பார்த்திபன்

இவர்களுடைய விவாகரத்துக்கு பல்வேறு தரப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டது. கிட்டதட்ட 20 வருடங்கள் கழித்து தற்போது தன்னுடைய விவாகரத்து பற்றி மனம் திறந்து இருக்கிறார் பார்த்திபன். அதாவது தான் காதலை முதன் முதலில் உணர்ந்தது சீதாவிடம் தான் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் அப்போது சீதா நன்றாக படங்கள் நடிக்க வேண்டும், இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்திருக்கிறார். ஆனால் சீதாவுக்கு நடிக்க விருப்பமில்லை என்பதாலேயே இவர்கள் சட்டென திருமணம் செய்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 11 வருட வாழ்க்கைக்கு பிறகு சீதாவுக்கு நடிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அப்போது பார்த்திபனுக்கு அது பிடிக்கவில்லை. குடும்பத்தில் விரிசல் விழுந்துவிடுமோ என நினைத்திருக்கிறார்.

ஒரு வேளை நடிப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்திருந்தால் எங்களுடைய வாழ்க்கை இப்போது அழகாக இருந்திருக்கும். விவாகரத்து செய்யவே கூடாது எப்படியாவது சமாளித்து வாழ்ந்து விடலாம் என்று தான் நான் நினைத்தேன் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இரண்டு பேருக்கு ஒத்து வரவில்லை என்ற பட்சத்தில், ஒன்றாக சேர்ந்து இருந்து கஷ்டப்படுத்துவதை விட பிரிந்து இருப்பதே மேல் என பார்த்திபன் பேசி இருக்கிறார்.

மகள்களின் திருமணத்தை இணைந்து நடத்தி வைத்த பார்த்திபன் சீதா

Next Story

- Advertisement -