சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாண்டியனின் மகனுக்கு பிறந்த விடிவு காலம்.. சூழ்ச்சி பண்ணிய அண்ணன்களுக்கு சவுக்கடி கொடுக்கப் போகும் கோமதி

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மூத்த மகனை தவிர மற்ற இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி விட்டதால் பாண்டியன் மற்றும் கோமதி ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்கள். அத்துடன் அண்ணனை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று செந்தில் மற்றும் கதிரும் வேதனைப்பட்டு வருகிறார்கள்.

எலியும் பூனையுமாய் சண்டை போடும் ராஜி கதிர்

இதனால் அண்ணனுக்கு திருமணம் ஆன பிறகு தான் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று செந்தில் கட்டுக்கோப்பாக இருக்கிறார். அதனால் மீனாவுடன் தாங்குவதை தவிர்த்து மாடியில் தூங்குவதற்கு போய்விடுகிறார். அதே நேரத்தில் கதிர் ரூமில் இருந்து நண்பருடன் கத்தி பேசும் பொழுது ராஜுக்கு ரொம்பவே எரிச்சலை ஊட்டுகிறது.

உடனே ராஜியும் போன் பேசுவது போல் கதிரை எதிர்மறையாக திட்டி பேசுகிறார். உடனே கோபப்பட்டு கதிர் மாடியில் அண்ணன்களுடன் தூங்கப் போய் விடுகிறார். இதனைத் தொடர்ந்து மீனா, ராஜிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தெரியாமல் வலிக்கு விழப் போகிறார். அந்த நேரத்தில் சரியாக கதிர் வந்து ராஜியை பிடித்து விடுகிறார்.

அப்பொழுது இருவரும் கண்ணாலேயே ரொமான்ஸ் பண்ணி பேசி விடுகிறார்கள். இதனை பார்த்து மீனா கொஞ்சம் ஓவராக ராஜிடம் கதிரை பற்றி பேசுகிறார். இதைக் கேட்ட கதிர் அப்படியெல்லாம் எங்களுக்குள் காதல் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனைத் தொடர்ந்து பாண்டியனின் மூத்த மகனுக்கு கோமதியின் தூரத்து சொந்த மூலம் ஒரு பெண் பார்க்கும் விஷயம் நடக்கப் போகிறது.

ஆனால் கோமதியின் அண்ணன்களுக்கும் அவர்கள் நெருங்கிய உறவுமுறை என்பதால் இந்த கல்யாணம் நடக்குமா என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. இருந்தாலும் பாண்டியன் எந்த பிரச்சனையும் வராது என்று பொண்ணு பார்க்க கூட்டு போகிறார். போன இடத்தில் சரவணனுக்கும் பெண்ணுக்கும் பிடித்து விடுகிறது.

அதே மாதிரி கோமதியை பார்த்து உன்னைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். உன்னை நம்பி என்னுடைய பெண்ணை தாராளமாக கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்த பெண் வீட்டிலும் ஏதாவது சூழ்ச்சி பண்ணி சக்திவேல் குளறுபடி பண்ண பிளான் பண்ணுவார்.

அப்பொழுது கோமதிக்கு இதற்கும், ஏற்கனவே நின்று போன நிச்சயதார்த்தத்திற்கும் அண்ணன்கள் தான் காரணம் என்று தெரிந்துவிடும். அந்த சமயத்தில் கோமதி இரண்டு அண்ணன்களுக்கும் சவுக்கடி கொடுக்கும் விதமாக பத்ரகாளியாக மாறப்போகிறார்.

- Advertisement -

Trending News