விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தையும், அண்ணன் தம்பி ஒற்றுமையும் கதைக்களமாகக் கொண்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இத்தொடரில் மூத்த அண்ணனான மூர்த்தியும் அவரது மனைவி தனமும் குடும்பத்திற்காகவும், தம்பி களுக்காகவும் குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்தார்கள். இதனால் பலராலும் இவர்களை காயப்படுத்த பட்டார்கள்.
தம்பிகள் வளர்ந்து அவர்களுக்கும் திருமணம் ஆகிறது. அப்போது இவர்கள் செய்த தியாகம் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. பிறகு தனம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி தெரிந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு கதை நகரும் போது கடைசி தம்பியான கண்ணன், ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்தில் கண்ணனை சேர்க்க மறுத்து விடுகிறார் மூர்த்தி.
இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணனின் அம்மா உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விடுகிறார். அம்மாவின் பிரிவால் மொத்த குடும்பமும் வருத்தத்தில் இருந்தது. சமீபத்தில் தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. தனத்திற்கு கண்ணன் உதவி செய்து மருத்துவமனையில் சேர்க்கிறார். பிறகு, தனத்திற்கு ஆண் குழந்தை பிறக்கிறது.
இதனைத் தொடர்ந்து வரும் எபிசோடுகளில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வெளியாக உள்ளது. இதனால் பல நட்சத்திரங்களை அழைத்து, வீடே விழாக்கோலமாக அலங்கரிக்கப்பட்டு பெயர் சூட்டு விழா விமர்சையாக நடக்க உள்ளதாக தெரிகிறது. இனிவரும் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.