வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மேக்கப் இல்லாம பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. மரணமாக கலாய்த்த நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியல் மிகவும் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் வரும் கதிர் முல்லை கதாபாத்திரங்கள்தான். இவர்கள் இருவருக்காகவே இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். கதிர் கதாபாத்திரத்தில் நடிகர் குமரனும், முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ராவும் நடித்து வந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு இறுதியில் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவருக்கு பதிலாக சின்னத்திரை நடிகை காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த சீரியலில் புதிய கதாபாத்திரமாக ஐஸ்வர்யா என்ற கேரக்டர் நுழைந்துள்ளது. இவர் இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பியாக நடிக்கும் கண்ணன் என்பவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தால் சீரியலில் பல திருப்புமுனைகள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pandiyan-store-aishu
pandiyan-store-aishu

ஐஸ்வர்யாவாக நடிகை தீபிகா நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தீபிகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தற்போது மேக்கப் போடுவதற்கு முன்பு துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் உங்களை பார்க்க முடியவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News