வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாண்டியனின் வெற்றி படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய வித்தியாசமான பட லிஸ்ட்

குணச்சித்திர நடிகர்களுக்கு அன்றைய காலத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் பாண்டியன் தனது நடிப்பால் கதாநாயகர்களுக்கு இணையாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் அதிகமான ரசிகர்கள் வைத்திருந்த நடிகர்களுள் பாண்டியன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண் வாசனை: தமிழ் சினிமாவில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாண்டியன். இப்படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். மேலும் விஜயன், நிழல்கள் ரவி மற்றும் ஜனகராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். இப்படம் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் ஹிட்டடித்த 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

pandiyan
pandiyan

மனைவி சொல்லே மந்திரம்: மோகன் மற்றும் நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் மனைவி சொல்லே மந்திரம். இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் எப்படி ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருந்தது. அதேபோல தான் பாண்டியனுக்கும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை படத்தின் இயக்குநர் ராம நாராயணன் செதுக்கி வைத்து இருந்தார். இப்படம் வெற்றி அடைவதற்கு முழுக்க முழுக்க காரணமே பாண்டியன் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.

ஆண் பாவம்; பாண்டியன் மற்றும் பாண்டியராஜன் நடிப்பில் உருவான திரைப்படம் ஆண்பாவம். இப்படத்தில் இவர்களுக்கு ஜோடியாக சீதா மற்றும் ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெற்றி அடைவதற்கு பாண்டியன் மற்றும் பாண்டியராஜனை முழுக்க முழுக்க காரணம் என்று கூறலாம் ஏனென்றால் இவர்கள் நடிப்புதான் படத்தின் வெற்றிக்கு ஒரு பக்கபலமாக அமைந்தது.

குரு சிஷ்யன்: ரஜினி மட்டும் பிரபு நடிப்பில் உருவான குருசிஷ்யன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சீதா மற்றும் கவுதமி ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டியன் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் இவரது நடிப்பு அன்றைய காலத்தில் பெரிதும் பேசப்பட்டது. ஏனென்றால் அன்றைய காலத்தில் அதிக ரசிகர்கள் வைத்திருந்த நடிகர்களுள் பாண்டியனும் ஒருவர்.

கிழக்குச் சீமையிலே: விஜயகுமார் மற்றும் நெப்போலியன் நடிப்பில் உருவான கிழக்குச்சீமையிலே திரைப்படம் அன்றைய காலத்தில்லிருந்து இன்றைய காலம் வரைக்கும் ரசிகர்களை கவர்ந்து தான் இருக்கிறது. இப்படத்தில் ராதிகா விஜயகுமாருக்கு தங்கையாகவும், நெப்போலியனுக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

தாய்மாமன் உறவு என்பது புனிதமான உறவு என விஜயகுமார் கூறும் வசனத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவர் பாண்டியன் தான். பாண்டியன் படத்தில் விஜயகுமார் மற்றும் நெப்போலியன் இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். பாண்டியன் ரசிகர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது கிழக்குச் சீமையிலே மட்டுமே.

- Advertisement -

Trending News