வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மீனாவை அலட்சியம் செய்த பாண்டியன், வரப்போகும் பிரச்சனை.. சொத்துக்காக ஓவராக கொந்தளிக்கும் மச்சான்கள்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், ராஜியின் அம்மா கால் தவறி வழுகி விழுந்ததால் பதறிப்போன ராஜி அம்மாவை தூக்கி வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். போனதும் ராஜியிடம் அங்கு இருப்பவர்கள் எப்படி இருக்கிறாய். உன்னை அந்த வீட்டில் நல்லா பார்த்துக் கொள்கிறார்களா என்று அக்கறையாக பேசுகிறார்கள்.

கொஞ்ச நேரம் பேசி முடித்ததும் சரி நான் வருகிறேன் என்று கிளம்பும் நேரத்தில் ராஜியின் அப்பா சித்தப்பா மற்றும் அண்ணன் வந்துவிடுகிறார்கள். உள்ளே வந்து ராஜியை பார்த்ததும் சித்தப்பா கோபத்தில் கண்மூடித்தனமாக திட்டுகிறார். அதோடு விடாமல் ராஜியின் அண்ணன் தரதரவென்று ராஜியை வெளியே இழுத்து கன்னத்தில் பளார் என்று அறைந்து தள்ளி விடுகிறார்.

சரியான நேரத்தில் பாண்டியன் ராஜியை பிடித்து விடுகிறார். உடனே ஏன் இப்படி அடிக்கிறாய் என்று கோபப்பட்டு பாண்டியன், ராஜ்ஜியை அடிக்க வருவதை தடுக்கிறார். தடுக்கும் பொழுது தெரியாமல் அவர் முதுகில் அடி விழுந்து விடுகிறது. இதை பார்த்த கதிர் உடனே ஆவேசத்தில் ராஜியின் அண்ணனிடம் சண்டை போடுகிறார். ஆக மொத்தத்தில் மிகப்பெரிய கைகலப்பு ஆகிவிட்டது.

பிறகு ராஜியை உள்ளே கூட்டிட்டு வந்து நீ ஏன் அங்கே போனாய் என்று கேட்கிறார்கள். அப்பொழுது நடந்த எல்லா விஷயத்தையும் ராஜி சொல்கிறார். உடனே அனைவரும் வழக்கம் போல் சோகம் மூஞ்சியுடன் கவலைப்பட்டுக் கொள்கிறார்கள். இதற்கு இடையில் மீனாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே சரவணனுக்கு பார்த்த பெண் வீட்டார்கள் மீது சந்தேகம் வந்து கொண்டிருக்கிறது.

சொத்தை ஆட்டைய போட போகும் மச்சான்கள்

இதைப்பற்றி பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களிடம் மீனா சொல்கிறார். ஆனால் யாருமே காது கொடுத்து கேட்கவில்லை. அத்துடன் மீனா சொல்வதை பொருட்படுத்தாததால் தங்கமயில் குடும்பம் மூலமாக மிகப்பெரிய பேராபத்து பாண்டியன் வீட்டிற்கு வரப் போகிறது.

இதனை தொடர்ந்து ராஜியை முழுவதுமாக தலைமுழுகி விட்டேன் என்று இவருடைய அப்பா சொன்னதிலிருந்து மொத்த சொத்துக்கும் உரிமை நம் மகன் தான் என்று ராஜியின் சித்தப்பா சந்தோஷத்தில் ஆட்டம் போடுகிறார்.

இதனை தக்க வைத்துக் கொள்வதற்காக ராஜியை எந்த காரணத்தை கொண்டும் வீட்டிற்குள் சேர்க்கக்கூடாது என்று மூர்க்கத்தனமாக அண்ணன் நடந்து கொள்கிறார். எப்படியாவது சொத்து அனைத்தும் நம் கைக்கு வர வேண்டும் என்று ராஜியின் அப்பாவை ஏமாற்றப் போகிறார்கள்.

- Advertisement -

Trending News