கதிரால் கண்ணனுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம்.. அதிர்ச்சியில் ஐஸ்வர்யா

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா தரப்பு மக்களிடையேயும் வரவேற்பு பெற்று தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டுக்கு தெரியாமல் கண்ணன் திருமணம் செய்ததால் மூர்த்தி கண்ணனை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் எதிர்வீட்டில் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் வசிக்கிறார்கள்.

ஆனாலும் கண்ணன் மேல் அனைவரும் பாசமாக உள்ளார்கள். மீனாவின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாவின் அப்பா ஜனார்த்தனன் மளிகை கடையில் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் வேலைபார்த்து வந்தார்கள். கடையில் பணம் காணாமல் போக திருட்டு பழி கண்ணன் மேல் விழுந்தது. கண்ணனிடம் பணம் இப்பவே வேண்டுமென ஜனநாதன் கட்டளையிட்டார்.

அப்போது கதிர், கண்ணனுக்கு பணத்தை கொடுத்து உதவி செய்தார். இதனால் ஜனார்த்தன் பணத்தை வாங்கிக் கொண்டு கண்ணனை கடையில் இருந்து துரத்திவிட்டார். இந்த விஷயம் கஸ்தூரி மூலியமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. மீனா கோபம் அடைந்து ஜீவாவுடன் சேர்ந்து ஜனார்த்தன் கடைக்கு சென்று கண்ணன் பணத்தை திருடவில்லை, கடை பையன் தான் பணத்தை திருடி உள்ளார் என்பதை நிரூபிக்கிறார்.

இந்நிலையில் ஜீவா, கதிர் இருவரும் எதார்த்தமாக ரோட்டில் நின்று கொண்டிருக்கும் போது ஜனார்த்தன் கடையில் பணத்தை திருடியவன் ஜீவா மீது இடித்து செல்கிறான். இவன்தான் பணத்தை திருடியது என கதிருக்கு தெரிய வந்ததும் ஆத்திரத்தில் கடை பையனை அடித்துவிட, உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என கோபத்தில் கத்திவிட்டு செல்கிறான்.

இதனால் கடைப்பையன் கதிரை பழிவாங்குவதற்காக கடைப்பையன் அடி ஆட்களுடன் சென்று கண்ணனை அடித்து காயபடுத்துகிறான். கண்ணன் தாக்கப்பட்டார் என்ற விஷயம் கதிருக்கு தெரிந்தால் ஆத்திரம் அடைந்து என்ன செய்வார் என்பது தெரியாது.

ஐஸ்வர்யாவுக்கு, கதிரால் தான் கண்ணனுக்கு இப்படி ஒரு நிலைமை என்பது தெரிந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெரிய விரிசல் ஏற்படும். இதனால் ஆத்திரமடைந்த 3 அண்ணன்மார்கள் தம்பிக்காக கடைப் பையனை புரட்டி எடுப்பார்களா என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்