முல்லையிடம் மன்னிப்பு கேட்ட ஜீவா.. ரிவஞ்ச் எடுக்கும் மீனா!

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பெற்று விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நாள்தோறும் விருவிருப்பான கதைக்களத்துடன் கலக்கி வருகிறது. இன்றைய எபிசோடில் முக்கியமான சீனாக ஜீவா முல்லையிடம் மன்னிப்பு கேட்க அதை பார்த்த மீனா கடுப்பாகி முலையின் மேல் வெறுப்பை காண்பிக்கிறார்.

நேற்று கதிரை, நீ வேலையே செய்வதில்லை என ஜீவா திட்ட, தன் கணவன் திட்டு வாங்குவதை தாங்கமுடியாமல் முல்லை ஜீவாவிடம் கோபமாக பேசினார். இதனால் வருத்தமடைந்த ஜீவா இன்றைய எபிசோடில் முல்லையிடம் மன்னிப்பு கேட்க, முல்லை தான் பேசியது தவறு என உணர்கிறாள்.

ஜீவாவிடம் நீ ஏன் மன்னிப்பு கேட்கிற, உங்க மூர்த்தி அண்ணாவிடம் முல்லை இப்படி பேசுவாளா? முல்லை கோபப்பட்டது தான் தவறு. இதே தவறை நான் செய்தால் குடும்பமா சேர்ந்து என்னை திட்டி தீர்த்து விடுவீர்கள் என ஜீவாவிடம் மீனா சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

பிறகு ஜீவா முல்லையிடம் மன்னிப்பு கேட்டதை மீனா தனத்திடம் சொல்லி, அவன் விளையாட்டா தான் பேசினான் ஆனால் முல்லை தான் கோபப்பட்டார் என மீனா புலம்பினார்.

அந்த நேரத்தில் முல்லை அங்கு வர, என் மேல கோவமா என முல்லை மீனாவிடம் கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லன்னு மழுப்பி வெறுப்பை மனதிலேயே வைத்துவிட்டு வாய் வார்த்தையாக சொன்னால் மீனா. தனமும் அதெல்லாம் இல்ல முல்லை நீ வந்து உட்காரு என அவரை சமாதானம் செய்தார்.

pandiyan-stores-mullai-2
pandiyan-stores-mullai-2

பின்னர் முல்லை மீனாவின் மகள் கயலை கூப்பிட, குழந்தையை தர மறுக்கிறார் மீனா. இவ்வாறு இன்றைய எபிசோட் மன்னிப்பு கேட்பதும், வருத்தப்படுவதுமாய் முடிவடைந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்