கோலாகலமாக நடைபெற்ற கயலின் பிறந்தநாள் விழா.. நினைத்ததை முடித்த தனம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்  சீரியல்கள் அனைத்தும்  சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு. அந்த வகையில்  கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாக  கொண்டு எடுக்கப்பட்ட  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்  ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன் இந்த காலத்தில் கூட்டு குடும்பம் என்பது சாத்தியமில்லை என பலரும் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை  பாண்டியன் ஸ்டோர்  சீரியலின் மூலம்  கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜீவா-மீனா இவர்களது மகள் கயல் பாப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்  வரும் வாரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.  எனவே  அதற்கான ஏற்பாடுகளை குறித்து ஏற்கனவே சீரியலில் தனம்-மூர்த்தி சீரியலில் விறுவிறுப்பாக பேசிக் கொண்டிருந்தாலும், மீனாவிற்கு மண்டபத்தில்  கயலின் பிறந்தநாளை கொண்டாட  மிகுந்த ஆசை.

ஆனால்  மூர்த்தியின் அம்மா இறந்து ஒரு வருடம் ஆகாததால் வீட்டிலே எளிமையான முறையில் கயலின் பிறந்தநாளை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டார் முடிவு செய்தனர்.

pandian-stores-cinemapettai65
pandian-stores-cinemapettai

இதற்காக அவர்களது வீட்டை பிரம்மாண்டமாக அலங்கரித்து பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்  கயல் பாபாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  தற்போது சோஷியல் மீடியாவின் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அத்துடன்  விஜய் டிவியில் இதற்கான புரோமோ  இன்னும் சில மணி நேரத்தில் வெளியாக உள்ளது.  ஆகையால்  பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் கலக்கப்போகும்  கொண்டாட்ட நிகழ்ச்சி காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்