வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சுக்குநூறாக உடைந்த இந்த குடும்பத்தில் இப்போது பல திருப்பங்கள் ஏற்பட்ட வருகிறது. அதாவது ஐஸ்வர்யா எதற்கெடுத்தாலும் போன் எடுத்துக் கொண்ட வீடியோ எடுக்க ஆரம்பித்து விடுகிறார்.

இதனால் ஏற்கனவே மூர்த்தி கண்டித்த போதும் ஐஸ்வர்யா அடங்கியபாடு இல்லை. இந்த சூழலில் மீண்டும் ஐஸ்வர்யா வீடியோ எடுப்பதை பார்த்து கடுப்பான கண்ணன் திட்டிவிட்டார். இதுவரை ஐஸ்வர்யா மீது கோபமே படாத கண்ணன் முதல் முறையாக கண்டித்துக் கொண்டார். இதனால் ஐஸ்வர்யா அப்செட்டில் இருக்கிறார்.

Also Read : முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்

ஆரம்பத்தில் இருந்தே ஐஸ்வர்யா மீது இதே கோபத்தை சரியான நேரத்தில் கண்ணன் காட்டி இருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்து இருக்கலாம். மற்றொருபுறம் ஜீவா தனது மாமனார் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் ஜீவாவிடம் கேட்காமல் ஒரு முக்கிய முடிவை மீனாவின் அப்பா எடுக்கிறார்.

மேலும் அதில் 25 லட்சம் முதலீடு செய்வதால் ஜீவாவுக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு தொகையை கொடுப்பதற்கு முன் யோசித்து செய்யலாம் என்று ஜீவா அறிவுரை சொல்ல மீனாவின் அப்பா கிண்டல் செய்கிறார். இதனால் கடுப்பான மீனா ஜீவாவுக்கு வக்காலத்து வாங்கி அவரை அழைத்துச் செல்கிறார்.

Also Read : டிஆர்பியில் மங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. ஒரே கதையே வச்சு உருட்டினா இப்படிதான்

அடுத்தடுத்து ஜீவாவுக்கு தனது மாமனார் வீட்டில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல தனது சொந்தக் குடும்பத்தின் அருமையை ஜீவா உணர்கிறார். மற்றொருபுறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புது வீடு கிரகப்பிரவேசம் தொடங்க இருக்கிறது. மேலும் மொத்த குடும்பத்திற்கும் கதிர் தானே சமைத்து சாப்பாட்டு பரிமாறுகிறார்.

ஆகையால் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக இணைய போகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜீவா சொல்லியும் கேட்காத மீனாவின் அப்பா பெரும் தொகையை முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் தனது மருமகன் சொன்னதை கேட்கவில்லையே என்பதை உணரப் போகிறார்.

Also Read : காட்டுத்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. வாய்ப்புக்காக தீயாக செய்யும் வேலை

- Advertisement -

Trending News