வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கன்னத்தை பழுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி.. தம்பி செஞ்ச வேலைக்கு இது பத்தாது

விஜய் டிவி பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. கொஞ்ச நாட்களாகவே இந்த சீரியல் போரிங் மற்றும் அரைச்ச மாவை அரைத்த மாதிரியே இருந்தது. இதனால் கொஞ்சம் இந்த சீரியலை கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இப்பொழுது ரொம்பவே விறுவிறுப்பாக கதைகள் அமைந்து வருகிறது.

அந்த வகையில் இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டு குடும்பமாக பிரியப் போகிறது. இதற்கு முக்கிய காரணமே கண்ணன் செய்த வேலைகள் தான். சமீப காலமாகவே ஜீவா கையில் பணம் இல்லாமல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கஷ்டப்பட்டு இருக்கிறார். இவரின் குழந்தைக்காக செலவு செய்யும் பணத்தை கூட அண்ணன் மூர்த்தியிடம் தான் கேட்டு வாங்குவார். அப்படி வாங்கும் போது அவர் கணக்கு பார்த்து ரொம்பவும் கம்மியாக தான் பணத்தை கொடுப்பார். இதனாலையே நிறைய இடத்தில் அவமானங்களை சந்தித்திருக்கிறார்.

Also read: கடைக்குட்டியால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய மீனாவின் அப்பா

இதற்கு அடுத்து கதிர், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலில் இருந்து வரும் பணத்தை தனியாக வைத்திருக்கிறார். அத்துடன் கடைக்குட்டி கண்ணன் சம்பாதித்த பணத்தை பாதியை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை மட்டுமே அண்ணனிடம் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் தெரிஞ்ச ஜீவா நம்மளும் வேலை செய்கிறோம் ஆனால் நம்ம கிட்ட பணம் இல்லை என்று மிகவும் வேதனைப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் பணத்தால் மீண்டும் அவமானப்பட்டு இருக்கிறார். இதனால் இத்தனை நாட்களாக கோபத்தை அடக்கி வைத்துக் கொண்டிருந்த ஜீவா அண்ணனிடம் எல்லாத்தையும் கொட்டி தீர்க்கும் விதமாக கோபத்தை காட்டி விட்டார். மொய் லிஸ்டில் எங்க பெயர் மட்டும் தான் இல்லை நீங்கள் எல்லாரும் தனித்தனியாக பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

Also read: இரண்டு குடும்பமாக பிரியப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கோபத்தின் உச்சகட்டத்தில் ஜீவா

இதை பார்த்த மூர்த்தி கண்ணனை கூப்பிட்டு கேட்கும் போது, ஐஸ்வர்யா நாங்களும் தனியா மொய் செய்யணும்லா என்று சொல்ல அதற்கு தனம் இதெல்லாம் நம்ம பேசிக்கவே இல்லையே என்று கேட்கிறார். அதற்கு உடனே எங்க கிட்ட பணம் இருந்தது அதனால் நாங்கள் தனியாக செய்தோம் என்று கூறுகிறார். பின்பு மூர்த்தி நீங்க தனியா செஞ்சீங்க ஓகே நான் கொடுத்த பணத்தை ஏன் எங்க பெயரில் வச்சு செஞ்ச என்று கேட்கிறார். அதற்கு கண்ணன், கதிர் அண்ணன் கொடுத்த மொய் பணமும் தனியாக தான் இருந்தது. அதனால மூன்று பேரின் மொய் பணத்தை தனியாக செய்தேன் என்று கூறுகிறார்.

அதற்கு மூர்த்தி நீ என்ன பைத்தியமாடா எத்தனை தடவை கூப்பிட்டு சொன்ன காது கொடுத்து கேட்காமல் இப்படி வந்து செய்துவிட்டு நிக்கிற என்று கோபத்தில் கண்ணனின் கண்ணம் பழுக்குற மாதிரி ஓங்கி ஒரு அறை விட்டார். ஆனாலும் இதெல்லாம் பாக்குற நமக்கு கண்ணனுக்கு இதெல்லாம் பத்தாது அவன் செஞ்ச வேலைக்கு இன்னும் நாலு சேர்த்து கொடுத்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது. இதெல்லாம் பார்த்த ஜீவா, மூர்த்தியை பார்த்து சும்மா நடிக்காதீங்க எல்லாரும் வெளியில போங்க என்று கோபத்தைக் காட்டி விட்டார்.

Also read: ஜீவாவை வச்சு செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. கதிர் மற்றும் கண்ணனால் பிரியும் சோகம்

- Advertisement -

Trending News