கதிருக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எதிர்க்கும் முல்லை.. வெடித்த பிரச்சனை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் கதிருக்காக குடும்பத்தினரிடம் முல்லை கோபமாக பேசுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக திறக்கப்படும் கடைக்கான கட்டிட வேலைகள் நடந்து வருகிறது. அதை பார்வையிடும் கதிர் அங்கு வேலை செய்பவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்.

அப்போது வீட்டிற்கு வரும் கதிரிடம் மூர்த்தி முக்கியமான ஒருவருக்கு பணம் கொடுத்து விட்டாயா என்று கேட்கிறார். கதிர் மறந்து விட்டதாக கூறுகிறார். அதற்கு ஜீவா கட்டிட வேலை செய்யும் இடத்தில் சும்மாதான இருக்க என்று கதிரிடம் கேட்கிறார்.

இதைக் கேட்டு கோபமடைந்த முல்லை ஜீவாவிடம் நீங்கள் எப்படி சும்மா இருக்கிறார் என்று சொல்லலாம். கட்டிட வேலையை இவரும் சேர்ந்து செய்கிறார் என்று கூறுகிறார். உடனே மூர்த்தி, நீ ஏன் இந்த வேலையெல்லாம் செய்கிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு முல்லை கடைக்காக தனம் அக்காவும், மீனாவும் நகையை கொடுத்தார்கள். எங்களிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை, உழைப்பையாவது தர வேண்டாமா என்று கோபமாக சொல்கிறார். இதைக்கேட்டு மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து நிற்கின்றனர்.

கண்ணன் – ஐஸ்வர்யா குடும்பத்தில் ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால், கதிர் – முல்லை குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவார்கள் போல என்று ரசிகர்கள் ப்ரோமோவை பார்த்து கலாய்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்