ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

எத்தனையோ அண்ணன் தம்பிகள் வைத்து படங்கள் மற்றும் சீரியல்கள் வந்திருந்தாலும்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் போர் அடிக்காமல் இன்னும் போய்க்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் தான். ஒவ்வொருத்தரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். ஆனாலும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோடுகளை தாண்டிய பிறகு வெற்றிகரமாக முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது.

மூர்த்தி இடம் சண்டை போட்ட பிறகு ஜீவா, மாமனார் வீட்டில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் தனியாக பிரிந்து வந்து கண்ணன் வாங்கின சம்பளத்தை ஆடம்பரமாக செலவு செய்து இப்பொழுது சாப்பாடுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். அதனால் தற்போது எல்லா பக்கமும் ட்ரெண்டிங்காக இருப்பது யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது தான். அதே மாதிரி ஐஸ்வர்யாவும் கண்ணன் இடம் நான் சமையல் பண்ற வீடியோ மற்றும் நம்ம செய்கிற விஷயங்களை சோசியல் மீடியாவில் போட்டால் நம்மளுக்கு காசு வரும் என்று சமையல் வீடியோக்களை போடுகிறார்கள்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

அத்துடன் இல்லாமல் டான்ஸ் வீடியோவையும் போடலாம் என்று கேமராவை செட் பண்ணிட்டு ஐஸ்வர்யா கண்ணன் ஆடுகிறார்கள். அதில் கண்ணன் ஐஸ்வர்யாவை பிடிக்க தவறியதால் அவர் கீழே விழுந்து விடுகிறார். அதன் பின் வயிறு வலி வந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கிறான். அங்கே டாக்டர் மருந்து செலவுகளை எழுதிக் கொடுக்கும் போது அதை வாங்கக்கூட பணம் இல்லாமல் அல்லோளப்பட்டு வருகிறான்.

ஒரு குடும்பத்தில் உள்ள பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஐஸ்வர்யா மிகச்சிறந்த உதாரணம். அடுத்து என்ன கிரெடிட் கார்டில் வாங்கின எல்லா பொருட்களையும் பிளாட்பாரம் கொண்டு போய் பாதி விலைக்கு விற்று பணம் கட்டினால் தான் அவனுக்கு பணத்தின் அருமை என்னன்னு புரியும். ஆடம்பரமாக செலவு செய்தால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும். அதனால் சம்பாதிக்கும் போதே சேமிப்பு பழக்கம் இருக்க வேண்டும் என்பதை அனைத்து குடும்பங்களுக்கும் தற்போது தொடர்கள் மூலமாக தெரியப்படுத்தி வருகிறார்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

ஆனாலும் இந்த விஷயம் கேள்விப்பட்ட மூர்த்தி தனம் சும்மா வேடிக்கை பார்த்து இருக்க மாட்டார்கள் கண்டிப்பாக அவர்கள் தான் வந்து இவர்களுக்கு உதவி செய்து கண்ணன் இன்னல்களில் இருந்து காப்பாற்றப்படுவான். இதற்கு அப்புறமாகவது ஐஸ்வர்யா கண்ணன் செய்த தவறை நினைத்து திருந்தினால் சந்தோஷம். இன்னொரு பக்கம் ஜீவா கடைப்பயனை மூர்த்திக்கு ஒத்தாசையாக அனுப்பி வைத்ததை மூர்த்தி தவறாக புரிந்து அந்தப் பையனை திருப்பி அனுப்பி வைத்ததால் தனம் ஜீவாவிடம் பேசுவதற்கு போகிறார்.

இதைப் பார்த்த கதிர் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சரியாகிவிடும். ஜீவா அண்ணன் எதுவும் நினைக்க மாட்டாங்க என்று தனத்தை சமாதானம் செய்கிறார். ஆனாலும் அண்ணன் வீட்டிற்கு வந்து சர்டிபிகேட்டை எடுக்க வரும் ஜீவா மற்றும் மீனா இவர்களைப் பார்த்து மனம் மாறி இவருடன் சேர்ந்து வாழ்வார்களா இல்லையென்றால் அதற்கும் ஜீவா கோபப்பட்டு ஒரேடியாக சண்டை போட்டு போக போகிறாரா என்று இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். இவர்கள் சீக்கிரமாகவே ஒன்று சேர்வதற்காக அதற்கான சீன்களை வைத்து பரபரப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைய இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறது.

Also read: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்