கடைக்குட்டியால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய மீனாவின் அப்பா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள கதை ஏற்கனவே படங்களில் உள்ள கதைகளில் இருந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. ஏனென்றால் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் ஆன பிறகும் அவர்கள் இருக்கும் ஒற்றுமையை குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. அதனாலயே இந்த நாடகம் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டு வருகிறது.

ஆனால் இதுவரை ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் கொஞ்சம் காசு பணம் சம்பாதித்துடன் தனியாக முடிவெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் ஜீவா மட்டும் அண்ணனை முழுமையாக நம்பி இருந்தார். ஆனால் இவருக்கு தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட சில விஷயங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு வந்தார். அதை எல்லாம் வெளிக்காட்டாமல் குடும்பத்திற்காக மனசுக்குள்ளே அடக்கி வைத்தார்.

Also read: வழக்கம்போல் புலம்பித் தவிக்கும் கோபி.. பாக்யாவை படாத பாடு படுத்தும் ராதிகா

சமீபத்தில் மூர்த்தி, ஜீவாவிடம் கடையை ஏன் பாதியில் அடைத்து விட்டு போனாய் என்று கோபமாக கேட்டார். இதனை கேட்ட ஜீவா பொறுத்துக் கொள்ள முடியாமல் மனதிற்குள் இத்தனை நாட்களாக வைத்திருந்த கோபத்தை மூர்த்தி இடம் போட்டு உடைத்து இருப்பார். பிறகு இந்த பிரச்சனை எல்லாம் சரியாகி மீண்டும் இவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்து நிலையில் மறுபடியும் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து இருக்கிறது.

அதாவது மீனாவின் தங்கை திருமணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கே கண்ணன் மற்றும் கதிர் தனி தனியாக மொய் பணம் செய்வதாக ஏற்கனவே முடிவு எடுத்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இதைப் பற்றி மூர்த்தியிடம் எதுவுமே கலந்தாய்வு செய்யவில்லை. இதற்கு இடையில் மீனா, ஜீவாவிடம் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு ஜீவா ஒரு குடும்பத்தில் தனித்தனியாக செய்யக்கூடாது. நமக்கு எல்லாத்துக்கும் சேர்த்து அண்ணன் மொய் வைப்பார் என்று கூறிவிட்டார்.

Also read: வாலை சுருட்டி கிட்டு அடங்கி போகும் குணசேகரன்.. எல்லா விதத்திலும் பால் போட நினைக்கும் அப்பத்தா

இதற்கு அடுத்து கண்ணனிடம், மூர்த்தி மொய் பணத்தை கொடுத்து அங்கே கொடுத்துட்டு வா என்று கொடுத்திருக்கிறார். பிறகு யார் பெயரில் செய்யணும் என்று சொல்லும் போது அவர் காது கொடுத்து கேட்காமல் எல்லாம் எனக்கு தெரியும் என்று போய்விட்டார். பிறகு வரிசையில் நின்று மொய் செய்யும்போது கண்ணன், கதிர் மற்றும் மூர்த்தி என்று மூவரும் பெயரில் தனித்தனியாக மொய் வைக்கிறார். பின்பு கடைசியாக மொய் லிஸ்ட் ஜீவாவின் மாமனார் கையில் கிடைக்கிறது. அதை பார்த்ததும் அவர் ரொம்ப கடுப்பாகிவிட்டார்.

இந்த லிஸ்ட்டை அவர் நேராக மீனாவிடம் கொடுத்து இதில் உங்க பெயர் மட்டும் தான் இல்லை என்று எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறார். இதை பார்த்ததும் மீனா ஆவேசப்பட்டு ஜீவாவிடம் சொல்கிறாள். ஏற்கனவே ஜீவா தொடர்ந்து அவமானத்தை மட்டும் சந்தித்த நிலையில் இந்த விஷயம் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. நேரடியாக மூர்த்தியிடம் ஏன் எல்லாரும் சேர்ந்து என்னை இப்படி அவமானம் செய்கிறீர்கள் என்று சொல்லி இனி உங்களுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எல்லாரும் வெளியே போங்க என்று கூறிவிட்டார். இது எல்லாத்துக்குமே முக்கிய காரணம் இந்த கடைக்குட்டி கண்ணன் தான். இப்பொழுது இவனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பிரிந்து விட்டது.

Also read: இரண்டு குடும்பமாக பிரியப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கோபத்தின் உச்சகட்டத்தில் ஜீவா

- Advertisement -