கொலை முயற்சி செய்யப்பட்ட கதிர்.. பதறி அடித்து ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை இருவரும் 20 லட்சம் ரூபாய் வெல்லக்கூடிய தம்பதியர்களுக்கான போட்டியில் கலந்து கொள்கின்றனர். அங்கு அவர்களுடன் இன்னொரு தம்பதியர் கைகளப்பில் ஈடுபடுவதுடன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து கதிரை அடித்து துவைக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத கதிரை கடுமையாக தாக்கும் கும்பலை பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் முல்லை தெரிவிக்கிறார். உடனே பதறி அடித்துக்கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பிகள் கதிரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக விரைந்து வருகின்றனர்.

Also Read: கதிரால் அவமானப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. வெடித்தது அடுத்த பூகம்பம்

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் குன்னக்குடியில் 76 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் வருவதற்குள் கதிரின் கதை முடிந்து விடும். ஆனால் சீரியலில் லாஜிக்கே இல்லாமல் விரைந்து வந்து கதிரை காப்பாற்றுவது போல் காண்பிப்பார்கள்.

இதன் பிறகு இறுதிச்சுற்றில் கதிர்-முல்லை  இருவரும் சிறப்பாக பங்கேற்று அவர்கள் தான் அந்த போட்டியில் வெற்றியாளர்களாக மாறுவார்கள். எனவே 10 லட்சம் பரிசு தொகையுடன் குடும்பத்தினரிடம் இணையும் கதிர்-முல்லை இருவரும், அவர்கள் அடைக்க வேண்டிய 5 லட்சத்தையும் திருப்பிக் கொடுப்பார்கள்.

Also Read: கைகலப்பில் ஈடுபட்ட கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

மீதி  இருக்கும் 5 லட்சத்தை அப்படியே குடும்பத்தினரிடம் கொடுத்து இனி கட்டப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்ல கட்டிடத்திற்கு கொடுத்துவிடுவார்கள். மேலும் புதிதாக மாற்றி இருக்கும் முல்லைக்கு தற்போது சித்ராவின் பழைய குரலை கொடுத்திருப்பது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இவ்வளவு நாட்களாக பிரிந்து இருந்த கதிர்-முல்லை இருவரும் இந்தப் போட்டியின் மூலம் வெற்றி பெற்று அவர்கள் கொடுக்க வேண்டிய 5 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவது சின்னத்திரை ரசிகர்களை குதூகலபடுத்துவார்கள்.

Also Read: இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட கதிர்-முல்லை.. பாண்டியன் ஸ்டோரில் நடக்கும் அடுத்தடுத்து ட்விஸ்ட்

- Advertisement -