3 லட்ச சரக்குடன் நடுரோட்டில் நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. பிரச்சினையைப் பெரிதாக்கி விட்ட கதிர்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து சிறிய மளிகைக் கடையிலிருந்து பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கட்டி அதை கோலாகலமாக திறத்தல் முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களுடைய ஆசையில் மண் அள்ளிப் போடும் விதத்தில் கட்டப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்து விட்டனர்.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் கடையை கட்டியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். மேலும் புதிதாக திறக்கும் கடைக்கு தேவையான 3 லட்சம் மதிப்புடைய சரக்குகளை கொண்ட லாரி பாண்டியன் ஸ்டோருக்கு வந்திருக்கிறது, சரக்கை எங்கு இறக்குவது எனத் தெரியாமல் கடை வாசலிலேயே அந்த லாரியை நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

இதனால் எப்படியாவது கடையை திறக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அதிகாரிகள் என்ன காரணத்திற்காக கடையை இழுத்து மூடி வைத்துள்ளனர் என்று குழம்பித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற கதிர் மற்றும் ஜீவா இருவரும் உயர் அதிகாரிகளுடன் பேசி காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அந்த அதிகாரி ஜீவா மற்றும் கதிர் இருவருக்கும் சரியாக பதில் சொல்லாமல் கிளம்பிவிட, உடனே கதிர் அந்த அதிகாரியின் கையை இழுத்துப் பிடித்த நிறுத்துகிறார்.

இதனால் கடும் கோபமடைந்த அதிகாரி, அலுவலகத்தில் இருக்கும் சக ஊழியர்களின் முன்னிலையில் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி கதிரை பார்த்து பல்லைக் கடித்து கொண்டு முறைக்கிறார். ஏற்கனவே இன்னும் இரண்டு நாட்களே கடை திறப்பு விழா இருக்கும்போது பிரச்சினையை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் முயற்சிக்கும்போது கதிருடைய கோபத்தினாலும், அவசர புத்தியினாலும் அதிகாரியை பகைத்துக்கொண்டு பிரச்சனையை மேலும் ஊதி பெரிதாக்கி விட்டார்.

இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எவ்வாறு இந்த பிரச்சனையை சரி செய்து டிபார்ட்மெண்ட் ஸ்டோரை திறக்கப் போகின்றனர் என்பதை தெரியாமல் தத்தளிக்கின்றனர். இருப்பினும் இந்த பிரச்சினையெல்லாம் கூடிய விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தங்கைகள் சரிசெய்து கடை திறப்பு விழாவில் கோலாகலமாக நடத்த போகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை