வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாசமழையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்திற்காகவே பார்க்கலாம் என்று தோன்றும் அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஐஸ்வர்யாவின் சுயநலத்தினாலும், ஆடம்பரப் பேராசை காரணமாக கண்ணனை பகடைக்காயாக யூஸ் பண்ணி கடனுக்கு மேல் கடன் வாங்கி இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டார்.

ஆனால் இவர்களுடைய முட்டாள்தனத்தால் கடைசியில் கதிர் மாட்டிக் கொண்டது மட்டுமில்லாமல் பாவம் மூர்த்தியும் இதனை நினைத்து வேதனைப்பட்டு வருகிறார். இதற்கு தீர்வாக அந்த பேங்க் ஆபீஸரிடம் பேசி சுமுகமாக முடிக்கலாம் என்று ஜீவா மற்றும் மூர்த்தி இருவரும் சேர்ந்து அவர்களை பார்த்து சமாதானப்படுத்த போகிறார்கள்.

Also read: கோபியை தண்ணி தெளித்து விட்ட பாக்கியா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ராதிகா

அங்கு மேனேஜர் எப்படி உங்க தம்பி எங்க ஆட்களை அடிக்கலாம் நாங்க கொடுத்த புகாரை வாபஸ் வாங்க மாட்டோம் என்று சொல்கிறார். உடனே மூர்த்தி கெஞ்சி கூத்தாடி பிறகு பேங்க் மேனேஜர் ஒரு டிமாண்ட் வைக்கிறார். அதாவது கண்ணன் வாங்கின 5 லட்ச ரூபாயும் நீங்கள் கொடுத்தால் நாங்கள் வாபஸ் வாங்கிக்கிறோம் என்று சொல்கிறார்.

கிரெடிட் கார்டு மூலமாக 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டுப் பொருட்களை வாங்கி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் குடும்பம் நடத்தவே லாயக்கில்லை என்று ஐஸ்வர்யாவின் சித்தி சொன்னது தப்பே இல்லை. பிறகு எப்படியும் கதிரை வெளியிலிருந்து கொண்டு வருவதற்காக பணத்தை ரெடி பண்ணுகிறோம் என்று மூர்த்தி சொல்லிவிடுகிறார்.

Also read: கதை இல்லாமல் மட்டமாக உருட்டும் ஜீ தமிழ் சீரியல்.. காரி துப்பும் கார்த்திகை தீபம்

இதனை மூர்த்தி வந்து தனத்திடம் சொல்ல உடனே அவங்க என்ன பண்ணுவாங்க என்னமோ நகைக்கடையே கையில வச்சிக்கிட்டு சுத்துற மாதிரி தான் நினைப்பு. ஆவுன்னா நகை எல்லாத்தையும் கழட்டிட்டு இதை வச்சு பணத்தை ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லி நகையை கழட்டி கொடுக்கிறார்.

பிறகு என்ன மூர்த்தி பணத்தை ஏற்பாடு பண்ணி கடனை கொடுக்கிறார். அடுத்து கதிர் வெளியே வந்ததும் மூர்த்தி ஜீவா இவர்கள் எல்லாரும் சேர்ந்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்வதற்கு போல அனைவரும் ஒன்றாக பாச மழையை கொட்டி பொழிகிறார்கள். அடுத்து இதில் கண்ணனும் சேர்ந்து விடுகிறார்.

இதற்கு அடுத்து மூர்த்தி கண்ணனை மன்னித்து ஏற்றுக் கொள்ளப் போகிறார். இதை கேட்டா ஐஸ்வர்யா என்ன சொல்லுவா டேய் கண்ணா இதையும் சேர்த்து வீடியோ எடுத்து நம்ம சேனல்ல போட்டா வியூஸ் வரும் அதன் மூலம் பணம் கிடைக்கும் என்று சொல்ல போகிறார்.

Also read டம்மி பீஸ் இடம் சத்தியம் வாங்கிய குணசேகரன்.. ஜனனியை விட ரேணுகா பரவாயில்லை

- Advertisement -

Trending News