புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை தொடர்ந்து மாற்றப்படும் மற்றொரு நடிகை.. இப்ப கதையே இவங்கள வச்சு தானே நகருது.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண்பதற்கென்றே இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை கரெக்டான நேரத்திற்கு தொலைக்காட்சி முன் அமர்ந்துண்டு. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கின்றனர்.

ஏனென்றால் இதில் அண்ணன்-தம்பி பாசத்தையும் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் காலத்தில் தனிக் குடும்பமாக வாழ்வோரின் மத்தியில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் கண்டு பூரிப்படைகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு காவியா அறிவுமதி, முல்லை கதாபாத்திரத்தில் தற்போது  நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூன்றாவது தம்பியாக நடித்து கொண்டிருக்கும் கண்ணன் ஐஸ்வர்யாவை திடீரென்று காதல் திருமணம் செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

எனவே கடந்த சில நாட்களாகவே கண்ணன் ஐஸ்வர்யாவை வைத்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நகர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த விஜே தீபிகா என்பவர் சீரியலில் இருந்து விலகி உள்ளார். இவர் வேறு சில சீரியல்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளாராம்.

pandian-store-cinemapettai
pandian-store-cinemapettai

ஆகையால் ஐஸ்வர்யாவிற்கு பதிலாக ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்த சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News