சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஷ்ணு- சம்யுக்தா சண்டையை ஆரம்பித்ததை இவர்தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த மட்டமான வேலை

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த க்யூட் ஜோடி நட்சத்திர தம்பதியர்கள் ஆக மாறியதற்கு சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை குவித்தனர். ஆனால் திருமணம் ஆன 15 நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்படுவது சகஜம்தான், அது ஒரு கட்டத்தில் விவாகரத்தாக மாறினால் அதை அமைதியாக பெற்றுக்கொண்டு சென்றுவிடலாம்.

ஆனால் விஷ்ணு- சம்யுக்தா இருவரும் ஒருவர் மற்றவரை குறித்து சமூக வலைத்தளங்களில் கேவலமாக பேசிய வீடியோவை பதிவிட்டு தங்களை தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் சண்டைக்கு முக்கிய காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏனென்றால் சம்யுக்தாவின் நெருங்கிய தோழியான அந்த நடிகையிடம் மட்டும் பேச வேண்டாம். அவர் ஒரே பாலினத்துடன் தகாத உறவை மேற்கொள்பவர் என விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிடம் சொல்லி இருக்கிறார்.

Also Read: சந்தி சிரிக்க வைத்த விஜய் டிவி ஜோடி.. இப்படி ஒரு மானங்கெட்ட காதல் கல்யாணம் தேவையா

ஆனால் தோழியை பற்றி நன்கு தெரிந்த சமயத்தா விஷ்ணுகாந்தின் மீதுதான் கோவப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல அந்த நடிகையும் கோயிலில் வைத்து சம்யுக்தாவிடம் ‘இந்த வாழ்க்கை உனக்கு சுத்தமாக செட்டாகாது. அப்படியே திருமணம் செய்து கொண்டால் பாதியிலேயே அவரை விட்டுப் பிரிந்து வந்து விடுவாய். உனக்கு தகுந்த ஆள் விஷ்ணு கிடையாது’ என்று கூறி இருக்கிறார்.

இருப்பினும் காதலுக்கு கண்ணில்லை என்பது போல் முன்பின் எல்லாம் யோசிக்காத சம்யுக்தா, விஷ்ணுவின் மீது இருந்த காதலால் அவசர அவசரமாக திருமணத்தை செய்து கொண்டார். இப்போது இருவருக்கும் 10 வயது வித்தியாசம் உள்ளிட்ட பல கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சமீபத்தில் அளித்த பேட்டியில் செய்தியாளர் விஷ்ணுகாந்த் இடம், ‘அந்த நடிகையும் சம்யுக்தாவும் ஒரே பாலினத்துடன் தகாத உறவு வைத்திருக்கின்றனரா?’ என்று கேட்டிருக்கிறார்.

Also Read: இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. டாப் 10 இடத்திற்கு மல்லுக்கட்டிய பிரபல சேனல்கள்

உடனே அவர் இல்லை என்று தான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என, இருப்பது போலவே பதில் அளித்திருக்கிறார். ஆனால் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிடம் அவருடைய தோழியான அந்த நடிகையின் கேரக்டர் சரியில்லை. அவர் ஒரே பாலினத்துடன் தகாத உறவுவைத்துக் கொள்ளும் பெண் என சொல்லி இருக்கிறார் என்று சம்யுக்தா இப்போது அளித்த பேட்டியில் அடித்து சொல்கிறார்.

இவர்கள் இருவரும் சொல்வதை வைத்து பார்க்கும் போது சிற்பிக்குள் முத்து சீரியலின் கதாநாயகி லாவண்யாவை தான் சொல்கிறார்கள். லாவண்யாவும் சம்யுக்தாவும் நெருங்கிய தோழிகள். சிற்பிக்குள் முத்து சீரியலில் இருவரும் இணைந்து நடித்ததால் இவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் லாவண்யா இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: தத்துப் பிள்ளைக்கு கிடைத்த பெஸ்ட் ஆங்கர் விருது.. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் டிவி

ஒருவேளை விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் தோழியை பற்றிய ஏராளமான விஷயத்தை வாய் கூசாமல் சொல்லி இருக்கிறார். ஒருவேளை அவர் தோழி என சொல்வதை விட லாவண்யா அல்லது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என சொல்லி இருந்தால் நிச்சயம் பிரச்சனை வேறமாதிரி மாறி இருக்கும். ஆனால் முல்லை பெயரை சொல்லாததால் தர்ம அடி கிடைக்காமல் தப்பித்துவிட்டார் என்று சம்யுக்தா விஷ்ணுவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

Trending News