அதிகரிக்கும் பான் இந்தியா படங்கள்.. டாப் லிஸ்டில் விஜய் சேதுபதியை பின்னுக்கு தள்ளிய சூர்யா

முன்பெல்லாம் ஒரு மொழியில் படம் எடுக்கப்பட்டால் அந்த மொழியில் மட்டுமே படம் வெளியாகும். ஒருவேளை அந்த படம் மிகவும் நன்றாக இருக்கும் பட்சத்தில் இதர மொழிகளில் டப் செய்து வெளியிடுவார்கள். ஆனால் சமீபகாலமாக பான் இந்தியா படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் மிகவும் முக்கியமான நான்கு மாநிலங்கள் என்றால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் தான் சமீபகாலமாக பான் இந்தியா படங்கள் அதிகளவில் வெளியாகின்றன. அந்த வகையில் இந்த நான்கு மாநிலங்களில் எந்த நடிகர் தங்களின் பான் இந்தியா படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள் என்பது குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ் தான். பாகுபலி படம் மூலம் முதன் முதலில் பான் இந்தியா படத்தை தொடங்கி வைத்ததே பிரபாஸ் தான். அதனை தொடர்ந்து சாஹோ படம் வெளியானது. தற்போது ஆதி புரூஷ் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தமிழ் நடிகர் தனுஷ் உள்ளார். இவரை பற்றி கூறவே வேண்டாம். கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழுக்கு பெருமை சேர்த்தவர். தனுஷ் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாக உள்ளது. ஹிந்தியில் அட்ராங்கி ரே என்ற படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுதவிர பிரபல இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள பான் இந்தியா படம் மூலம் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் புஷ்பா படம் மூலம் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும், நான்காவது இடத்தில் கேஜிஎப் இரண்டாம் பாகம் மூலம் கன்னட நடிகர் யாஷும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மான் உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான குரூப் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆறாவது இடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படமும், ஏழாவது இடத்தில் தமிழ் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும், எட்டாவது இடத்தில் விஜய் சேதுபதியின் மைக்கேல் படமும், ஒன்பதாவது இடத்தில் பிரபு தேவாவின் பஹீரா படமும், பத்தாவது இடத்தில் ராம்சரணின் ஆர்ஆர்ஆர் படமும் உள்ளது. இதில் ஏற்கனவே வெளிவந்த படங்கள் மற்றும் இனி வெளியாக உள்ள படங்கள் மூலம் தென்னிந்திய நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை