சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கோபியின் அப்பா விட்ட மரண டோஸ்.. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக மாறும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் கொடுக்கும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இது ஒரு குடும்பத்தலைவி வீட்டிலும், சமூகத்திலும் சந்திக்கும் சவால்களை மையக்கருவாக கொண்ட கதை ஆகும். இந்தக் கதையில் புதிதாக வில்லியா அவதாரம் எடுக்க தயாராகிறார் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் ரேஷ்மா பசுபுலேட்டி.

தற்பொழுது இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நந்திதா ஜெனிபருக்கு பதிலாக புதிதாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடித்த நந்திதா ஜெனிபர் சிறப்பாக நடித்து வந்தார்.

ஆனால் திடீரென்று அவர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காரணம் ராதிகா கதாபாத்திரம் வில்லத்தனமாக மாறப்போகிறது என்பதால்தான் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். தற்பொழுது வரை பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரம்தான் தந்திரமாகவும், வில்லத்தனமாகவும் இருந்து வருகிறது.

இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் பாக்கியலட்சுமி சீரியலின் குடும்பத் தலைவனாக கோபி தன்னுடன் கல்லூரியில் படித்த ராதிகாவுடன் தொடர்பில் இருப்பது அவருடைய அப்பாவிற்கு தெரியவந்து, அவர் கோபியை செம ரைட் விட்டார்.

இதன்பிறகு பாக்கியா, ராதிகா வீட்டிற்கு சாப்பாடு கொடுக்க போகும் போது அவரை தடுத்து நிறுத்தி கோபியின் அப்பா, ராதிகா வீட்டிற்கு சென்று ராதிகாவிற்கு செம டோஸ் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ராதிகாவிற்கு, கோபி பாக்யாவின் கணவர் என்பதை தெரியாததை அறிந்த கோபியின் அப்பா ராதிகாவிற்கு உண்மையை எடுத்து கூறுவாரா? மாட்டாரா? என்ற சஸ்பென்ஸ் உடன் பாக்கியலட்சுமி சீரியல் நகர்ந்துகொண்டிருக்கிறது.

gopi-radhika
gopi-radhika

கோபியை பற்றிய உண்மை தெரியவந்தால், உண்மையில் வில்லியாக மாறி ராதிகா ரிவஞ் எடுக்க போகப் போகிறார். அத்துடன் ராதிகாவின் மகளுக்கும் வர வர கோபியை பிடித்து போவதால் பாக்கியாவை விவாகரத்து செய்த ராதிகாவை கோபி திருமணம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே வரும் நாட்களில் ராதிகா பாக்யாவின் எதிரியாக மாறி தன்னுடைய முழுமையான வில்லத்தையும் காட்ட உள்ளதால் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

- Advertisement -

Trending News