சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

சூனியக்காரியாக மாறிய பாக்கியா.. கழுதைக்கு வாக்கப்பட்ட அடி, உதை வாங்கிதான் ஆகணும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பார்க்கவே முடியாத அளவிற்கு கேவலமான கதையை வைத்து உருட்டிட்டு வருகிறார்கள். அதாவது கோபிக்கு இரண்டு பொண்டாட்டி, ராதிகாவுக்கு இரண்டு புருஷன், செழியனுக்கு ஒரு பொண்டாட்டி ஒரு காதலி, அமிர்தாவுக்கு இரண்டு புருஷன் இவர்களை வைத்து ஒரு கதை நகர்கிறது. இந்த மாதிரி மட்டமான ஒரு சீரியல் இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்று இந்த நாடகத்தை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

ஆனாலும் எதற்கும் அசராமல் அரைத்த மாவையே வச்சு அரைச்சுட்டு வராங்க. இதுல அமிர்தாவின் முன்னாள் கணவர் உயிருடன் வந்துவிட்டார். அவர் குழந்தையையும் அமிர்தாவையும் தேடி இங்கே அலைந்து கொண்டிருக்கிறார் என்ற விஷயம் பாக்யாவிற்கு தெரிந்து விட்டது. உடனே பாக்யா இவர்கள் இருவரையும் சந்திக்க விடக்கூடாது என்று நினைக்கிறார்.

அத்துடன் சூனியக்காரி மாதிரி பல தில்லுமுல்லு வேலைகளையும் பார்க்க ஆரம்பித்து விட்டார். இவருடைய நடவடிக்கையை ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது என்று மாமியார் இவரிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு என்ன என்று சொல்லத் தெரியாமல் வழக்கம்போல் முழிக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கோபி, ராதிகா விடம் மாட்டிக் கொண்டு சிக்கிச் சின்ன பண்ணமாக தவித்து வருகிறார்.

அதாவது கோபிக்கு இதுவரை பணப் பிரச்சினையை வராத போது தற்போது தொடர்ந்து இக்கட்டான சூழ்நிலையில் தவித்துக் கொண்டு வருகிறார். அது தெரியாமல் ராதிகா ஷாப்பிங் போகணும் என்று கோபியை படுத்தி எடுக்கிறார். பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்களே கழுதைக்கு வாக்கப்பட்ட அடியும் உதையும் வாங்கி தான் ஆக வேண்டும். அது தற்போது கோபி விஷயத்தில் சரியாக இருக்கிறது.

பாக்கியாவுடன் இருக்கும் பொழுது ராஜா மாதிரி இருந்தார். அப்படிப்பட்ட இவர் ராதிகாவை கல்யாணம் பண்ணினதிலிருந்து நிம்மதி இல்லாமல் தினமும் பிரச்சினையை சமாளித்துக் கொண்டிருக்கிறார். இதுவே இவருக்கு பெரிய டார்ச்சர் ஆக தற்போது ஒவ்வொரு நாளும் மாறிவிட்டது. அதனாலேயே நெஞ்சுவலி வந்துடுது. இதுக்கு பேசாம பாக்கியா கூடவே குப்பை கொட்டி இருக்கலாம்.

இதற்கடுத்து பாக்கியா தன் மகன் எழில் வாழ்க்கையை எப்படி காப்பாற்றுவது என்று யோசித்து அமிர்தாவையும் கணேசனையும் சந்திக்க விடாமல் செய்வதற்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ அது எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுகிறார். அத்துடன் நிலா பாப்பாவை வெளியே எங்கேயும் கூட்டிட்டு போகக்கூடாது என்று கண்டிஷனும் போட்டு விடுகிறார். அதற்கு காரணம் தன்மகன் எழில் வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சுயநலத்தினால் தான். இன்னும் இந்த மாதிரி என்னென்ன அக்கிரமங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை.

- Advertisement -spot_img

Trending News