வேலியில போற ஓணானை வேட்டியில் விட்ட மாரி செல்வராஜ்.. நாரடித்த பாரி

Maamanan Controversy: இன்று தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் மாரி செல்வராஜின் மாமன்னன். இந்த படத்திற்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருப்பதற்கான காரணம் இயக்குனர் மாரி செல்வராஜ் தான். மாபெரும் நடிகரான கமலை, எதிரே வைத்துக்கொண்டு தேவர் மகன் படத்தை விமர்சித்தது தான்.

அதுவும் கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தை இப்போது தோண்டுவதற்கான காரணம் என்ன. மாரி செல்வராஜின் முந்தைய படங்களான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்கள் வெளியிடும்போது இவ்வளவு ஆணவமான பேச்சு அவரிடம் இல்லை. இப்போது படத்தின் நாயகன் உதயநிதி என்பதால் திடீரென மாரி செல்வராஜுக்கு துளிர் விட்டதா என்ற பல கேள்வி அடுக்கிக் கொண்டே போகிறது.

Also Read : மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்

இதுகுறித்து வள்ளல் மீடியா என்ற யூடியூப் சேனலில் பாரி என்பவர் மாரி செல்வராஜை நாரடித்திருக்கிறார். அதாவது தேவர் மகன் படம் முழுக்க முழுக்க வன்முறையை வைத்து தான் எடுக்கப்பட்டிருந்தார்கள். அதிலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பாடலில் தேவர் மகன் என்று குறிப்பிடுவதற்கான காரணம் என்னவென்றால் படத்தை விளம்பரம் செய்ய தான்.

ஏனென்றால் அப்போது அந்தச் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் அதிகமாக இருந்ததால் இந்தப் பெயர் பரபரப்பை ஏற்படுத்தும் அதன் மூலம் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கில் தான் இவ்வாறு வைத்துள்ளனர். அதுமட்டும்இன்றி தேவர் மகன் படத்தில் இசக்கியின் கதாபாத்திரம் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்காது.

Also Read : மாமன்னன் படம் எப்படி இருக்கு.? முதல் விமர்சனத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய தனுஷ்

தேவர் மகன் படத்தில் நிறைய காட்சிகளில் அவரும் அதே சாதியினர் என்பதை உணர்த்தும் விதமாக இயக்குனர் வைத்திருப்பார். இதையெல்லாம் மாரி செல்வராஜ் கவனிக்காமல் இருந்து இருப்பாரா. மாமன்னன் படம் தென் மாவட்டங்களில் நடக்கக்கூடிய சாதிய பிரச்சனையை பிரதிபலிக்கும் படம் என்று கூறியிருக்கலாம்.

ஆனால் இரு சாதியினர் இடையே கொம்பு சீவி விட வேண்டும் என்பதற்காக தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் தனது அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் மாமன்னன் கதை என சர்ச்சை கிளப்பி விட்டிருக்கிறார். அந்த படத்தில் ஏன் உங்கள் அப்பா இருக்க வேண்டும், இயக்குனர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.

நான் கூட கேட்கிறேன், தேவர் மகன் படத்தில் அவெஞ்சர்ஸ் இருந்தால் எப்படி இருக்கும், டைனோசர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால் கோமாளித்தனமாக தான் இருக்கும். இது தவிர அந்த படத்தில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும், தாத்தா இருந்தால், பொண்டாட்டி இருந்தால் என்று கேட்டால் அது வன்மம் என்று மாரி செல்வராஜை நார் அடித்திருக்கிறார் பாரி.

Also Read : இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாமன்னன்.. உதயநிதியால் கிளம்பிய அடுத்த பிரச்சினை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்