ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

5 மாஸ் ஹீரோக்களுக்கு கொடுத்த தரமான படம்..வாழ்நாளில் மறக்க முடியாத படங்களை கொடுத்த பி வாசு

தமிழ் சினிமாவின் ஒரு இயக்குனராக, எழுத்தாளராக மற்றும் நடிகராக வெற்றி பெற்றவர் தான் பி. வாசு. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர். இவர் கிட்டத்தட்ட 64 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். அப்படிப்பட்ட இவர் 5 மாஸ் ஹீரோகளுக்கு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அந்த படங்கள் எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத படங்களாக இருக்கிறது. இப்பொழுது அந்த படங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

வால்டர் வெற்றிவேல்: பி.வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வால்டர் வெற்றிவேல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சத்யராஜ், சுகன்யா, ரஞ்சிதா மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்தார்கள். இதில் சத்யராஜ் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்தில் சத்தியராஜின் சகோதரர் குற்றவாளி என்பதை தெரிந்து கொண்டு அவருக்கு எதிராக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது.

Also read: பழைய ரூட்டுக்கே திரும்பிய சத்யராஜ்.. மிரள வைக்க வரும் அவதாரம்

சின்னத்தம்பி: 1991 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் சின்னத்தம்பி திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதாரவி மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் பிரபு ஒரு படிக்காத கிராமத்து ஏழையாகவும், குஷ்பூ பணக்கார பெண்ணாகவும் நடித்திருப்பார்கள். இந்த படம் பிரபுவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

மன்னன்: பி.வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு மன்னன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், குஷ்பூ, விஜயசாந்தி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரஜினி ஒரு பணக்கார மற்றும் திமிர் பிடித்த பெண்மணியே திருமணம் செய்து கொண்டு அவர் கொட்டத்தை அடக்குவார். இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மேலும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் ஆனது.

Also read: ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கொடுத்த மரண மாஸ் ஹிட்ஸ்.. வசூல் வேட்டை ஆடிய 6 படங்கள்

கூலி: பி.வாசு இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு கூலி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சரத்குமார், மீனா, ராதா ரவி, ராஜா ஆகியோர் நடித்தார்கள். இப்படம் தொழிலாளர்களின் சங்கத்தில் இருக்கும் பிரச்சனையே சமாளிக்கும் விதமாக சரத்குமார் நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

சேதுபதி ஐபிஎஸ்: பி.வாசு இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், மீனா, ஸ்ரீ வித்யா, எம் என் நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படம் தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையே மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இந்த படம் விஜயகாந்தின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக இது அமைந்தது.

Also read: விஜயகாந்த் போட்டியாக அர்ஜுன் கல்லா கட்டிய 6 போலீஸ் படங்கள்.. மார்க்கெட் போனதால் சொந்தமாக தயாரித்த படம்

- Advertisement -

Trending News