எரிச்ச படுத்திய இந்திய அணி.. அனுபவமே இல்லாமல் ஓவர் மெத்தனம் காட்டி கேவலப்பட்ட வீரர்கள்

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் நடந்தது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சீனியர் வீரர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழி நடத்தினார். இந்த அணியில் சீனியர் என்று பார்த்தால் புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் மட்டும்தான்.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 225 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக தீபக் ஹூடா 104 ரன்களை விளாசினார். அவருக்கு சஞ்சீவ் சாம்சன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர் பங்கிற்கு 77 ரன்களை குவித்தார். இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் மெத்தனமாக இருந்தனர்.

ஆனால் எல்லாத்துக்கும் திகைப்பூட்டும் அளவிற்கு பதிலடி கொடுத்தது அயர்லாந்து அணி. ஆரம்பத்திலிருந்தே அதிரடியில் இறங்கிய அந்த அணியினர் நான்கே ரன்களில் மட்டும் தான் தோல்வியைத் தழுவினர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் மெத்தனமான பேட்டிங்கும், பந்து வீச்சும் தான்.

இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் எளிதாக எடுக்க இருந்த  நேரத்தில் ரொம்ப மெத்தனமாக பேட்டிங் செய்தனர். 226 ரன்கள் இந்த அணிக்கு ஓவர் என்று அசால்ட்டாக பேட்டிங் செய்தனர். இதனால் இந்திய அணி 25-30 ரன்கள் குறைவாக எடுத்தது.

இந்திய அணியில் மொத்தம் 3 பேர் கோல்டன் டக் அவுட் ஆனார்கள். தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் என மூன்று பேரும் வருசையாக டக் அவுட் ஆகி, இவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்து விட்டோம் என்று மெத்தனம் காட்டினார்.

அதுமட்டும்மின்றி பந்து வீச்சிலும் இந்த ஸ்கோர் எல்லாம் அயர்லாந்து அடிக்காது என்று முதலில் இருந்தே மோசமாக வீசியது இந்திய அணி. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சற்று சாவு பயத்தை காட்டி வரலாற்று வெற்றி பெறவேண்டிய அயர்லாந்து அணி எதிர்பாராதவிதமாக 4 ரன்னில் கோட்டை விட்டது.

Next Story

- Advertisement -