மாஸ்டர் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெருமகிழ்வு அளித்ததை யாரும் மறக்க முடியாது.
அந்த வகையில் கொண்டாடப்படவேண்டிய அல்லது கெண்டாடப்பட்டிருக்கும் படங்கள் குறித்து “இந்தியன் எக்ஸ்ஃபிரஸ்” ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
ஈஸ்வரன்
யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த படம் ஈஸ்வரன். பாரதி ராஜா சிலம்பரசன் கூட்டணியில் வெகுவாய் பாராட்டுக்களை பெற்றது.
பூமி
நடிகர் ஜெயம் ரவி கதை செலக்சனில் பிச்சு உதறுகிறார். வழக்கமான கதையில் சிறிதளவே மாற்றங்களோடு அல்லாமல் கதையே ஏதோ இவருக்காகவே தயார் செய்தாற் போல இருந்திருக்கும்.
விவசாயிகள் போராட்ட காலத்தில் வெளியான படம் என்பதால் பெருமளவு வரவேற்பை பெற்றது.
கபடதாரி
சிபிராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியிட்ட படம். ஒரு டிராபிக் போலிஸ் பழைமையான க்ரைம் வழக்கை தேடி கண்டுபிடித்து அதில் குற்றத்தை நிரூபணம் செய்யும் கதை சரியான திரைக்கதையால் ரசிக் வைத்திருப்பார் இயக்குனர்.
மாறா
மேட்டி மாதவன் நடிப்பில் சீரியல் மாதிரியான கதையை வைத்து மாறுபட்ட திரைக்கதையில் அமோகமாக வரவேற்பை பெற்றது மாறா.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற யார் அழைப்பது பாடலும் கூட.
ஜகமே தந்திரம்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜகமே தந்திரம் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தேவையான வசூலை ஈட்டியது இந்த படம்.
படத்தில் இடம்பெற்ற ரகிட ரகிட பாடல் வைரானதை தொடர்ந்து படத்திற்கான எதில்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது.
நெஞ்சம் மறப்பதில்லை
எஸ் ஜே சூர்யா ரெஜினா தாமஸ் நடிப்பில் பட்டையை கிளப்பி படம். பெருமளவு வரவேற்பு இல்லை எனினும் தேவையான வசூலை எடுத்தது.
எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு வெகுவாய் பாராட்டப்பட்டது.
மண்டேலா
யோகி பாபு நடிப்பில் சரியான நேரத்தில் வெளிவந்த படம் மண்டேலா ஒரு பக்கம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னொரு பக்கம் மண்டேலா பட டிரைலர் என மிரட்டி இருப்பார்கள்.
ஒரு வாக்கிற்கு தரப்படும் முக்கியத்துவமும் வாக்களிக்காத மக்களை மதிப்பற்ற நிலைக்கு காட்டும் விதமும் என இயக்குனர் சிறப்பாக காட்டி இருப்பார்.