ஜெயிக்க முடியாமல் போன 5 அக்கட தேசத்து ஹீரோஸ். திருநங்கையாக மனதை உலுக்கிய மலையாள நடிகர்.

Other language heroes are not sign in tamil cinema: வந்தாரை வாழவைக்கும் தமிழகம் பிற மொழியில் இருந்து வந்த நடிகர்களை தமிழ் மக்களை ஆளும் அளவிற்கு உயர்த்தி வைத்தது. அதே சமயம் சில பேரை மட்டும் அடையாளம் தெரியாமல் காலை வாரியும் உள்ளது. தமிழ் சினிமாவில் ஆர்வத்துடன் களமிறங்கிய பிற மொழி நடிகர்கள் காலூன்ற எண்ணி காணாமல் போன கதையே இது. அவர்களில்  சிலரை காண்போம்.

நரேன்: மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி மூலமாக அறிமுகமான நரேன். நடிகர் குணச்சித்திர நடிகர், வில்லன் என பல0 வேடங்களில் தோன்றியும் தமிழ் மக்கள் மனதில் நிலைக்கவில்லை. தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்து செல்லும் புயல் போல் இருக்கிறார் நரேன். தமிழில் கடைசியாக லோகேஷின் கைதியில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் மீண்டும் கைதி 2 இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் யேசுதாஸ்:  திரை துறையில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் ஜேசுதாஸின் மகனாக அறியப்பட்ட விஜய் ஜேசுதாஸ் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தில் வில்லனாகவும் படைவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.  தனது கான குரலால் கவர்ந்தவருக்கு  தமிழில் அழுத்தமான  கதாபாத்திரங்கள் அமையாது போனது சோகம்.

Also read: ஹிட் படங்களை வைத்து காசு பார்க்கலாம் என 2023-இல் ரீமேக் செய்து படுதோல்வி அடைந்த 6 படங்கள்

நானி: தெலுங்கு நடிகரான இவர் வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். நான் ஈ படத்தில் சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தினார் மொழியை தாண்டி கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். ஜிகர்தண்டா புகழ் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்திருக்கும் இவரின் அடுத்த படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

கிச்சா சுதீப்: கன்னடத்தில் தான் நடித்த படத்தின் மூலம் மக்களிடையே கிச்சாவாக அறியப்பட்ட சுதிப் அவர்கள், கன்னட சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராவார்.  தமிழில் நான் ஈ,புலி போன்ற படங்களில் வில்லனாக வந்து மிரட்டிய இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் சாதுவான சமூக சேவகாரம். தனது அறக்கட்டளையின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க உதவியும் கிராமங்களை தத்தெடுத்து பராமரிக்கவும் செய்கின்றார்.

காளிதாஸ் ஜெயராம்:  மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது வென்ற காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் 2020 இல் வெளிவந்த பாவ கதைகளில் திருநங்கையாகவும் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார் காளிதாஸ். கதையின் போக்குக்கு ஏற்றபடி இயல்பாக நடிக்கும்  காளிதாசிற்கு தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்காமல்  போனது தமிழ் சினிமாவின் துரதிஷ்டமே.

Also read: தமிழ் சினிமாவை கெடுத்து குட்டிச்சுவராக்கும் விஷயங்கள்.. உண்மையை போட்டுடைத்த சத்யராஜ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்