சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

ஒரு பக்கம் சைக்கோ, இன்னொரு பக்கம் பைத்தியம்.. ரெண்டையும் வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி சீரியல்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் உருப்படியான கதை என்றால் அது பாக்கியலட்சுமி தான் என்று குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகள் அனைவரும் பார்த்து வந்தார்கள். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் மாதங்களுக்கு முன்னாடி வரை இருந்தது. இப்போது எல்லாம் இந்த கன்றாவியான நாடகத்தை போட்டு ஏன் இப்படி எங்கள புலம்ப விடுகிறீர்கள் என்று கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

அதற்கு காரணம் இப்போது பாக்கியா, கோபி, ராதிகா என்ற கதையை மாற்றி தேவையில்லாத ட்ராக்கை வைத்து உருட்டி வருகிறார்கள். அதாவது அப்பனை போல தான் பிள்ளை இருக்கும் என்பதற்கு ஏற்ப செழியனின் நடவடிக்கைகள் ரொம்பவே மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் பொண்டாட்டி மாசமாக இருக்கும் பொழுது அம்மா வீட்டுக்கு போனா, புருஷன் இந்த மாதிரி தான் நடந்து கொள்வார் என்று தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறது.

இன்னொரு பக்கம் அமிர்தாவின் கணவர் இறந்து பல வருடங்களாக ஆன நிலையில் தற்போது எங்கு இருந்து வந்தார் என்று தெரியவில்லை உயிருடன் வந்து பொண்டாட்டியும் பிள்ளையும் தேடிக் கொண்டு அலைகிறார். அந்த வகையில் தன் மனைவிக்கு இன்னொரு கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததால் பைத்தியக்காரன் போல் சுற்றுகிறார்.

அத்துடன் குழந்தையை பார்த்து எமோஷனல் ஆகி நிலா பாப்பா பின்னாடியே போகிறார். இது இப்பொழுது இந்த நாடகத்துக்கு தேவையான கதையா? முடிஞ்சு போன விஷயத்தை வைத்து ஏன் நாடகத்தை உருட்டனும். அந்த அளவிற்கு எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் மொக்கையாக சம்பந்தமே இல்லாமல் ஒரு கேரக்டரை உள்ளே கொண்டு வந்து பைத்தியக்காரனைப் போல் அலைய விடுகிறார்.

இதற்கு அடுத்து தன்னுடைய குழந்தையை பார்த்த பிறகு மொத்தத்தையும் மறந்து பொண்டாட்டி பிள்ளை என்று வாழ வேண்டும் என ஆசைப்படும் செழியனை விடாமல் துரத்திக் கொண்டு சைக்கோ மாதிரி பிளாக் மெயில் பண்ணிக் கொண்டிருக்கிறார் மாலினி. அத்துடன் நடுராத்திரியில் போன் பண்ணி நீ இப்ப என்ன பாக்க வரலைன்னா நான் அங்க வந்து நிற்பேன் என்று மிரட்டுகிறார்.

உடனே செழியனும் பயந்து அவளை பார்ப்பதற்கு யாருக்கும் தெரியாமல் போக பார்க்கிறார். அப்பொழுது பாக்கியா இவனைப் பார்த்து நீ இப்போ எங்கேயும் போகக்கூடாது என்று ஸ்ட்ரீட் ஆக சொல்லி ரூமுக்கு அனுப்பி வைக்கிறார். அடுத்தபடியாக சைக்கோ மாதிரி பித்து பிடித்து மாலினி அங்கே ரொம்ப ஓவராக அழிச்சாட்டியம் பண்ணுகிறார். ஆக மொத்தத்தில் ஒரு பக்கம் சைக்கோ, இன்னொரு பக்கம் பைத்தியம் என இரண்டையும் வைத்து நாடகத்தை உருட்டி வருகிறார்கள்

- Advertisement -spot_img

Trending News