பிக்பாஸ் நாமினேஷனில் சிக்காத ஒரே நபர்.. கூண்டோடு மாட்டிய 15 போட்டியாளர்கள்

சென்ற வாரம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முழுவதும் கலகலப்பாக சென்ற நிலையில், இந்த வாரம் துவக்க நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டில்  நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.

அதில் பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரைச் செல்வியை யாரும் நாமினேட் செய்யக்கூடாது என்பது பிக்பாஸ் விதிகளில் ஒன்று. மீதம் இருக்கும் 16 போட்டியாளர்களும் பாவனி ரெட்டியை மட்டும் யாரும் நாமினேட் செய்யவில்லை.

மற்ற 15 போட்டியாளர்களும் நாமினேட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக இசைவாணி மற்றும் அக்ஷரா ஆகிய இருவரை சக போட்டியாளர்கள் அதிகமாக நாமினேட் செய்தனர்.

எனவே இந்த நோமினேஷன் லிஸ்ட் இருக்கும்  இமான் அண்ணாச்சி, சுருதி, அபிஷேக் ராஜா, இசைவாணி,  ராஜு, மதுமிதா, சின்னப்பொன்னு, பிரியங்கா, அபினய் வட்டி, அக்ஷரா, ஐகி பெர்ரி, நாடியா சாங், வருண், சிபி, நிரூப் உள்ளிட்ட  15 போட்டியாளர்களும் வரும் வாரத்தில் நாமினேஷன் ப்ராசஸிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் குறைந்த வாக்கை பெறும் ஒரு நபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட உள்ளார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் பவானி ரெட்டி தவிர மற்ற அனைவரும் ஒருவிதமான பதட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் பிக்பாஸ் வீட்டில் வெளியேறும் முதல் நபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

pavani-reddy-bigg-boss
pavani-reddy-bigg-boss
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்