Vijay Tv Serial Part 2 : விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சில சீரியல்கள் மட்டும் தான் பார்ப்பவர்களின் மனதில் இடம் பிடித்து பல வருடங்களாக ஓடி கொண்டு வருகிறது. அதே நேரத்தில் என்னதான் மக்களுக்கு பிடித்திருந்தாலும் சீக்கிரமா இந்த நாடகத்தை முடிங்க என்று ஒரு பக்கம் புலம்பித் தவிக்கும் நிலைமை வந்திருக்கிறது. அப்படி ஒரு சீரியல் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாக ஓடி வந்த நிலையில் தற்போது தான் முடியும் தருவாயில் இருக்கிறது.
எப்படா ஒரு வழியா முடியபோகுது என்று நினைக்கும் போது அதற்குள் பார்ட் 2க்கான ப்ரோமோவை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். இந்த பிரமோவை பார்த்த மக்கள் மறுபடியும் முதல்ல இருந்தா என்று புலம்புகிறார்கள். அந்த வகையில் முதல் சீசனில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை வைத்து வெளிவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது இறுதி கட்ட நேரத்திற்கு வந்துவிட்டது.
சரி ஒரு வழியாக முடியப்போகுது என்று சந்தோசத்தில் இருக்கும் பொழுது மறுபடியும் மூர்த்தியை வைத்து அப்பா மகன் பாசத்தை கொண்டு இரண்டாம் பாகமாக வர இருக்கிறது. இதில் மூர்த்திக்கு மூன்று மகன் இருப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. அத்துடன் இவருடைய மனைவியாக தனத்திற்கு பதிலாக நடிகை நிரோஷா நடிக்கிறார். ஆனாலும் இதில் லாஜிக்கே இல்லாமல் சில விஷயங்கள் இருக்கிறது.
அதாவது முதல் பாகத்தில் அண்ணன் தம்பிகளுக்கு பெண் குழந்தைகளும் பிறந்தது. ஆனால் அவர்கள் யாரையும் காட்டாமல் மூன்று தம்பிகள் போலவே தற்போது மூன்று பிள்ளைகள் என கொண்டு வந்திருக்கிறார்கள். அத்துடன் இதில் காட்டப்படும் ஒரு மகன் யார் என்றால் முதல் பாகத்தில் பிரசாந்த் கேரக்டரில் ஆரம்பத்தில் நடித்த வசந்த்வாசி இப்பொழுது மகனாக கொண்டு வந்திருக்கிறார்.
ஆனாலும் மூர்த்தியின் தம்பிகளின் கதைக்கு எண்டு கார்டு போட்டுவிட்டு அப்பா மற்றும் மூன்று மகனின் கதையை வைத்து மறுபடியும் அஞ்சு வருஷம் உருட்ட போகிறார்கள். இப்பதானே முடிஞ்சுச்சு அதுக்குள்ளயுமா, கொஞ்சம் கூட கேப் விடாமல் இப்படி கொலையா கொல்றீங்களே என்று ரசிகர்கள் வழக்கம் போல் அவர்களுடைய கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் தற்போது வெளிவந்த ப்ரோமோ படி மூன்று பசங்களும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நிரோஷா வந்து எழுப்புகிறார். அப்பொழுது சோம்பேறி பட்டு எழுந்திருக்காமல் இருந்த நிலையில், நிரோஷா அப்பா இப்ப வராங்க என்று சொன்னதும் படபடன்னு எழுந்திருச்சு கிளம்பி விடுறாங்க. அந்த வகையில் கண்டிப்பாக இதுவும் பாசத்தை வைத்து குடும்பங்களுடன் பார்க்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.