வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்து டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் சில முக்கிய சீரியல்கள் இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலின் இயக்குநரை, மீண்டும் சன் டிவி தட்டி தூக்கியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மெட்டி ஒலி சீரியல் சன் டிவியில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த சீரியலின் மறுஒளிபரப்பு 2008 ஆம் ஆண்டும் மீண்டும் 2020 ஆம் ஆண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதைத் தொட்ட மெட்டி ஒலி சீரியலின் இயக்குனர் திருமுருகன் மீண்டும் சன் டிவியின் புத்தம் புது சீரியலை இயக்க உள்ளார்.

Also Read: மறு ஒளிபரப்பில் மண்ணை கவ்விய 6 மெகா சீரியல்கள்.. எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த மரண அடி

தற்போது மெட்டி ஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் மீண்டும் ஒரு பெரிய தொடரை பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்க உள்ளார். எதற்காக சன் டிவி அவரை வளைத்து போட்டு உள்ளது என்றால், ஏற்கனவே புதிய புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி சன் டிவி, டிஆர்பி-யில் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.

இதில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் புதிதாக துவங்கப்பட்டு டாப் லிஸ்டில் இருக்கிறது. அது மட்டும் அல்ல விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் கதாநாயகி ஆலியா மானசாவும் சன் டிவியில் விரைவில் துவங்கப்படும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்.

Also Read: 1000 எபிசோட் கடந்த ஒரே சீரியல்.. டிஆர்பி-க்காக ரீ-டெலிகாஸ்ட் செய்யும் சன் டிவி

ஏற்கனவே ஆலியா மானசாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருப்பதால் நிச்சயம் புதிதாக துவங்கும் இனியா சீரியலும் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் மீண்டும் மெட்டி ஒலி போன்ற தொடர்கள் வந்தால் சன் டிவியை அசச்சுக்க ஆளே இல்லை.

மேலும் திருமுருகன் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்தும் திரைப்படங்களையும், நெடுந்தொடர்களையும் இயக்குவதில் கெட்டிக்காரர். இவர் சீரியல் மட்டுமல்ல பரத் நடித்த எம் மகன் அதைத்தொடர்ந்து பரத்தின் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். ஆகையால் அவர் புதிதாக சன் டிவியில் துவங்கும் சீரியலை குறித்து சின்னத்திரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: மெட்டி ஒலி புகழ் திருமுருகன் இயக்கிய படங்கள்.. காமெடிக்கு பஞ்சமே இல்ல

- Advertisement -

Trending News