கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் போட்டியாளர்களை புரிந்து கொள்ள ரசிகர்கள் சற்று சிரமப்பட்டாலும் தற்போது ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அதில் சிலர் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் இப்போதே பயங்கர வெறுப்பையும் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். பிக் பாஸ் வீட்டின் முதல் நாளிலிருந்தே இவருடைய நடவடிக்கை பலருக்கும் சற்று கடுப்பை தான் வரவழைக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்துவை இவர் கிண்டல் செய்வதுதான்.

Also read : விவாகரத்தை பற்றி வெளிப்படையாக பேசிய தினேஷ்.. சர்ச்சைகளுக்கு மறைமுகமாக பதிலளித்த ரட்சிதா

அதைத்தொடர்ந்து இவர் காட்டும் ஓவர் ஆட்டிட்யூட் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அதிலும் ரட்சிதா மகாலட்சுமியை பார்த்து இவர் ஜொள்ளு விடுவது அப்பட்டமாக தெரிகிறது. கடந்த எபிசோடில் ஒரு டாஸ்கின் போது இவர் ரட்சிதாவிடம் எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. அதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்றாலும் உங்களின் நட்பு தொடர வேண்டும் என்று வழிசலாக பேசினார்.

மேலும் நான் சினிமா துறையில் இருப்பதால் சீரியலே பார்க்க மாட்டேன். ஆனால் உங்களின் ஒரு சீரியலை முதல் முறை பார்த்தபோது நான் விழுந்து விட்டேன். அதன் பிறகு பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் சிவப்பு நிற புடவையில் உங்களை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது என்று கேவலமாக ஜொள்ளு ஊற்றினார்.

Also read : விஜய் டிவியில் இருந்து வெளியே வந்த ரட்சிதா.. அடிச்சான் பாரு பம்பர் பிரைஸ்

இதைக்கேட்ட ரட்சிதா மகாலட்சுமிக்கு சிறிது சங்கடமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் சமாளிப்பாக சிரித்து வைத்தார். இதைத்தான் தற்போது ரசிகர்கள் அடப்பாவி என்ற ரேஞ்சுக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனென்றால் ராபர்ட் மாஸ்டருக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எக்கச்சக்கமாக இருக்கின்றனர் என்பது திரை உலகில் பலருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் இவருடைய டான்ஸ் ஸ்டுடியோவில் பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் லிஸ்ட் ஏராளம்.

அவ்வளவு ஏன் வனிதா விஜயகுமாருடன் இவர் ஒரே வீட்டில் வாழ்ந்ததும் அனைவருக்கும் தெரியும். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போன்று அந்த விஷயத்தையே இவர் பொய் என்று பேசினார். இந்நிலையில் அவர் கணவரை பிரிந்திருக்கும் ரட்சிதாவுக்கு ரூட் போடுவது போன்று பேசி இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இவர் ஊற்றிய ஜொள்ளால் பிக் பாஸ் வீடே இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

Also read : நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்