Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு மீது நம்பிக்கை இல்ல, அந்த டாப் நடிகரை களத்துல இறக்குங்க.. கடிவாளம் போட்ட கமலின் ராஜதந்திரம்

இப்படத்திற்கான வேலையை சிம்பு வெளிநாட்டில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகிறார்.

simbu-kamal

Kamal-Simbu: ரீ என்ட்ரி படங்களில் கிடைத்த தொடர் வெற்றினை கொண்டு, சிம்பு தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்க இருக்கும் உச்ச நடிகர் பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

வெந்து தணிந்த காடு, மாநாடு போன்ற படங்களின் வெற்றியை கொண்டு பத்துதல படத்தில் கேங்ஸ்டராய் தெறிக்க விட்டிருப்பார். இவரின் மார்க்கெட் அவ்வளவு தான் என நினைத்தவர்களுக்கு பதிலடியாய் இவரின் பரிமாணம் இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட வாய்ப்புகளும் வரத் தொடங்கின.

Also Read: முத்தையா போனதால் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி.. உறுதியான வித்தியாசமான டைட்டில்

இந்நிலையில் கமல் மேற்கொள்ளும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவை வைத்து படம் தயாரிக்க முடிவெடுத்தார். அதற்கான கதையும் உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் ஒரு வரலாற்று படம் என்பதால் அதற்கான வேலைகளை சிம்பு வெளிநாட்டில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகிறாராம். மேலும் சிம்புவை நம்பி இறங்கிய கமல் தற்பொழுது சிம்பு மீது கொஞ்சம் நம்பிக்கை குறைந்ததன் காரணமாக புது யுத்தியை பயன்படுத்த முயன்று வருகிறார்.

Also Read: ஜவானால் எகிறிய அட்லீயின் டிமாண்ட்.. ஆரம்பிக்கும் முன்பே லாக் செய்த சன் பிக்சர்ஸ், அதுக்குனு இத்தனை கோடியா.!

மேலும் ஒரு வேளை இப்படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயத்தில் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் பிரபலங்களை நடிக்க வைக்க முடிவு எடுத்தாராம். மேலும் ஏன் வேறு ஒருவர், நாமே இறங்கிப் பார்த்து விடலாம் என இப்படத்தில் நடிக்க ஆயத்தமாகி விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் தான் நடிப்பது என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதற்காகவும் இப்படி ஒரு பிளானாக கூட இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் பேச தொடங்கின. மேலும் படத்தின் மரியாதை அதிகமாக இருந்தால் பிசினஸும் அதிகமாக வசூல் அள்ளும் என்பதற்காக கமல் போடும் ராஜதந்திரமாக பார்க்கப்படுகிறது.

Also Read: இது ஜெயிலரா இல்ல விக்ரம் ரீமேக்கா.. இப்படி வசமா மாட்டிக்கிட்டீங்களே நெல்சன்!

Continue Reading
To Top