ஐபிஎல் விளையாட எதிர்ப்பு கிளம்பியதால் புலம்பும் 4 வீரர்கள்.. விராட் கோலிக்கு சவால் விடும் வீரர்

IPL T20: இந்தியாவில் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் ரொம்பவே பிரபலம். உள்ளூர், வெளிநாடு என தகுதி வாய்ந்த வீரர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இதில் வெளிநாட்டு வீரர்கள் பலரை ஏலத்தின் மூலம் தேவைப்படும் அணிகள் கைப்பற்றும்

ஐபிஎல் விளையாட எல்லா நாடுகளிலிருந்தும் வீரர்கள் இந்தியா வருவது வழக்கம் ஆனால் பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் மட்டும் இதில் கலந்து கொள்வதில்லை. அங்கே கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அதிகம். பாதுகாப்பு காரணமாகவும் அவர்கள் இந்தியா வந்து விளையாடுவதில்லை. வாய்ப்பு கிடைத்தால் விளையாட தகுதியுள்ள 4 வீரர்கள்

சாஹீன் ஆப்ரிடி: அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி கொண்டிருக்கும் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவர் விளையாடுவார் என்றால் இவரையும் எடுப்பதற்கு போட்டிகள் நிலவும்.

விராட் கோலிக்கு சவால் விடும் வீரர்

பாபர் அசாம்: இந்திய அணியில் எப்படி விராட் கோலியோ, அதேபோல் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம். இவர் மட்டும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்தால் அனைத்து அணியின் உரிமையாளர்களும் ஏலத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொட்டுவார்கள்

முகமது ரிஸ்வான்: இவர் இப்பொழுது பாகிஸ்தான் அணியின் ஓபனிங் விளையாடிக் கொண்டிருக்கிறார். ரிஸ்வான் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய அதிரடி வீரர். 20 ஓவர் போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்து இருக்கும் வீரர்களில் இவரும் ஒருவர்

பத்தர் ஜமான்: ஒரு காலத்தில் இந்தியாவின் கங்குலி, டிராவிட், டெண்டுல்கர் எப்படியோ அதைப்போல் தற்போது உள்ள பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், பத்தர் ஜமான். இவர்கள் மூவரும் தற்போது பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -