நடிப்பை உதாசீனப்படுத்திய நிரோஷா.. லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பால் தொலைந்த கேரியர்

பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகளும் ராதிகாவின் தங்கையுமான நிரோஷா ஒரு காலத்தில் டாப் கதாநாயகியாக வலம் வந்தவர். 90களில் வசீகரத் தோற்றத்தால் ரசிகர்களை கட்டிப்போட்ட முன்னணி நடிகையாக இருந்த இவர், காதலால் தன்னுடைய கேரியரை கெடுத்துக்கொண்டார்.

இவர் 1988 ஆம் ஆண்டு பிரபு, கார்த்தி, அமலா உள்ளிட்ட நடித்த அக்னி நட்சத்திரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார். பெரும்பாலும் கார்த்திக், நிரோஷா காம்போவில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: நீங்கள் பலரும் அறியாத நடிகைகளின் உறவு முறைகள்!

அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் ராம்கி, நிரோஷாவின் இரண்டாவது படமான செந்தூரப்பூவே படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காதலாக மாறியது.

நீண்ட நாட்களாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் நிரோஷா-ராம்கி இருவரும் வாழ்ந்து வந்தனர். பிறகு 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் நிரோஷாவிற்கு காதல் ஒன்று ஆரம்பித்த பிறகு தமிழ் சினிமாவை ஒதுக்கி பட வாய்ப்புகளை இழந்தார்.

பின்னர் கொஞ்சம் குண்டாக மாறியதால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். தொடக்கத்தில் ராம்கியை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கோல் போட்டு குறுக்க நின்ற அக்கா ராதிகா அதன் பிறகு இன்னும் கொஞ்சமாக தங்கை நிரோஷாவை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

Also Read: இளைஞர்கள் மத்தியில் இன்னும் க்ரஷ் ஆக உள்ள 6 நடிகைகள்.. 50 வயதிலும் அசால்ட் பண்ணும் ஆன்ட்டிகள்

அதன் பிறகு தான் நிரோஷாவிற்கு மீண்டும் நடிக்கும் ஆசை ஏற்பட்டதால் ராதிகா தயாரிக்கும் நாடகங்களில் நிரோஷாவை நடிக்க வைத்தார். இப்போதும் நிரோஷா டாப் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் அவர் திருமணம் ஆன போதே சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து படம் நடித்து இருந்தால் நிச்சயம் வேற லெவலுக்கு சென்றிருப்பார்.

Also Read: ராம்கி, நிரோஷாவின் காதல் திருமணத்தில் வில்லியாக மாறிய ராதிகா.. பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -