தாமரையிடம் சகுனி வேலையை ஆரம்பித்த நிரூப்.. என்ன ஒரு கிரிமினல் மைன்ட் ப்ரோ

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மூன்று லட்சம் பணத்தை வைத்து, விருப்பப்பட்டவர்கள் அதை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று அறிவித்தார். ஆனால் போட்டியாளர்கள் யாரும் அந்த பணத்தை எடுக்காமல் இருந்தனர்.

இதனால் இன்று பிக்பாஸ் அந்த பணத்தை 5 லட்சமாக உயர்த்தினார். ஆனாலும் போட்டியாளர்கள் பணத்தை உற்று பார்த்துக் கொண்டு இருந்தார்களே தவிர யாரும் எடுக்க முன்வரவில்லை. அதன் பிறகு பணம் 7 லட்சம் வரை உயர்ந்தது.

அதற்கும் போட்டியாளர்கள் எந்த ரியாக்சனும் தராமல் இன்னும் பணத்தை உயர்த்தினால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டு இருந்தனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் நிரூப், தாமரையிடம் இந்த பணத்தை பற்றி பேசி மூளை சலவை செய்து கொண்டிருந்தார்.

முதலில் அவர் தாமரையிடம் எந்த காரணத்தை கொண்டும் இந்த பணத்தை எடுத்து விடாதே என்று எச்சரித்தார். அதன் பிறகு அவர் மனதை மாற்றும் விதமாக உனக்குத்தான் நிறைய கடன் பிரச்சனை இருக்குல்ல அப்போ இந்த பணத்தை எடுக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தாமரை இந்த வீட்டில் வாழ்வதை விட அந்தப் பணம் ஒன்றும் பெரிய விஷயமல்ல, கோடிக்கணக்கில் பணத்தை வைத்தாலும் நான் அதை தொடக்கூட மாட்டேன் என்று நிரூப்பின் முகத்தில் அடித்தார் போன்று கூறினார்.

நேற்று பணப்பெட்டியை வைத்த போதிலிருந்தே நிரூப் அனைவரிடமும் இப்படித்தான் பேசி கொண்டிருக்கிறார். யார் மனதில் பணத்தை எடுக்கும் எண்ணம் இருக்கிறது என்று அவர் தெரிந்து கொள்ள இவ்வாறு பேசி வருகிறார்.

கடைசியில் பிக்பாஸ் இந்த பணத்தை 10 லட்சமாக உயர்த்தினால் நிச்சயம் அதை அவர் எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார். ஏனென்றால் அவர் இறுதிப்போட்டிக்கு செல்ல மாட்டோம் என்ற மனநிலைக்கு எப்போதோ வந்து விட்டார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை