வித்தியாசமாக பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு பட நடிகை.. குவியும் பாராட்டு

கடந்த பொங்கலுக்கு வெளியான சிம்புவின் ‘ஈஸ்வரன்’, ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நிதி அகர்வால். தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே இவர் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர்.

பார்ப்பதற்கு இவர் அழகாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த இரண்டு படங்களுமே சரியாக ஓடாததால், இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இவர் கைவசம் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் ஒரு புதிய படம் மட்டுமே உள்ளது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

நேற்று (ஆகஸ்ட் 17) இவர் தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற நடிகை நிதி அகர்வால், ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கைக்குலுக்கி பேசி மகிழ்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதோடு, அங்குள்ள முதியோர்களுக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தானே உணவு பரிமாறி மகிழ்ச்சியூட்டி இருக்கிறார். இவரது இந்த செயலைப்பார்த்த சினிமா உலகத்தினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

niddhi-aggarwal
niddhi-aggarwal

தற்சமயம், ஹீரோ, ஹாரா ஹர வீரா மல்லு ஆகிய இரண்டு தெலுங்குப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்