வெளியேறிய பின் சர்வைவர் போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் சூட்டிய இந்திராஜா.. ஏன் இந்த கொலவெறினு தெரியலை.!

நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். இந்திரஜா பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் அவருடைய புகைப்படத்தை விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து பதிவிடுவார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இந்திரஜா ஊடகங்களில் பேட்டி கொடுத்துள்ளார். இந்த சின்ன வயதில் இவ்வளவு தூரம் வந்தது பாசிட்டிவாக உள்ளது இது நல்ல விஷயம் என அர்ஜுன் பாராட்டினார்.

பின்பு இந்திரஜா சக போட்டியாளரை பற்றி பேசத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரொம்ப நல்லவங்க யாருமே இல்ல அவர்கள் அவங்க விளையாட்டில் கவனமாக இருக்கிறார்கள். இந்திரஜா சக போட்டியாளர்களுக்கு பட்டம் கொடுத்துள்ளார்.

ராம் பச்சோந்தியாக இருப்பார் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றால் அவர் வேண்டும் என்று சொல்லக் கூடிய இயல்பு. விக்ராந்த் நாம் எப்படி அவரிடம் நடக்கிறோமோ அதுபடியே நம்மிடம் நடந்து கொள்வார். அவருக்கு மூக்கு கண்ணாடி என்ற பட்டம் வைத்தார்.

பாய்சன், விஷக்கிருமி என்ற இரு பட்டங்களையும் காயத்ரி, ஐஸ்வர்யாவுக்கு கொடுத்தார். இவர்கள் இருவரிடமும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கணும். நான் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு பார்வதிக்கு எப்போதுமே உண்டு, அது எல்லோருக்கும் தெரியும். லேடி கேஷ் ஒரு புள்ள பூச்சி அவங்க வேலைய அமைதியாக பார்த்துட்டு இருப்பாங்க.

2nd-elimnination-survivor
2nd-elimnination-survivor

சரவணன், லட்சுமி பிரியா சாது மிரண்டா. இருவரும் அவங்க வேலையைப் பார்ப்பார்கள் யாராவது தலையிட்டு அவங்க அவ்வளவு தான். கோல்டன் ஹார்ட் இங்கே யாருமே இல்ல இப்படி எல்லாருக்கும் பட்ட கொடுத்துள்ளார் இந்திரஜா ஷங்கர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்