டெக்னாலஜியில் மிரளவிட்ட கமலின் 5 படங்கள்.. ஆண்டவரை இளமையாக காட்டும் இந்தியன் 2

கமலின் படங்கள் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு நிறைய புது டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தன்னுடைய படங்களுக்காக மிகுந்த மெனக்கெட்டு பல விஷயங்களை கமல் செய்து வருவார். அந்த வகையில் டெக்னாலஜியில் மிரள விட்ட கமலுடைய சிறந்த 5 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியன் 2 : ஷங்கர், கமல் கூட்டணியில் உருவான இந்தியன் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. மேலும் முதல் பாகத்தில் சேனாதிபதி மற்றும் சந்துரு என்று இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இந்த படத்தில் ப்ராஸ்தெட்டி என்ற மேக்கப் முதல்முறையாக கமல் மற்றும் சுகன்யாவுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்போது இந்தியன் 2வில் கமலை அதேபோல் இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குருதிப்புனல் : கமல், அர்ஜுன் கூட்டணியில் அதிரடியாக வெளியான திரைப்படம் தான் குருதிப்புனல்.இந்த படத்தில் ஹாலிவுட் பேட்மேன் என்னும் படத்தில் பயன்படுத்தப்பட்ட டால்பி சவுண்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி இருந்தனர். இது எல்லோரையுமே வியக்க வைக்கும் அளவில் இருந்தது.

Also Read : சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

மகாநதி : கமல், சந்தான பாரதி கூட்டணியில் நிறைய படங்கள் வெளியானாலும் அதில் இன்றும் பேசப்படும் படமாக இருப்பது மகாநதி. இந்த படத்தில் தான் ஆவிட் என்ற சாஃப்ட்வேர் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரிதும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

தேவர்மகன் : கமலின் சிறந்த 10 படங்களை எடுத்துக் கொண்டால் அதில் தேவர் மகன் படமும் முக்கிய இடத்தில் இருக்கும். இந்த படத்தின் திரைக்கதை சமீபத்தில் மாமன்னன் படம் வெளியான போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. முதல்முறையாக திரைக்கதை எழுத தேவர்மகன் படத்தில் ஒரு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டிருந்தது.

விக்ரம் : ராஜசேகர் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் எக்கச்சக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Also Read : மாயாவின் முகத்திரையை கிழித்தெறிந்த அழுமூஞ்சி அர்ச்சனா.. சூனியக்காரியின் தவறை தட்டிக் கேட்காத கமல்