செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிக்பாஸில் ஓரம் கட்டப்படும் பிரியங்கா.. புதிதாக உருவாகும் முரட்டு கூட்டணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் புதிதாக கூட்டணி உருவாகியுள்ளது. முக்கியமாக  VJ பிரியங்கா இல்லாமல் இந்த கூட்டணி உருவாகியுள்ளது. முதலில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஆகியோர் ஒரு கூட்டணியாக இருந்து பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் போட்டு வந்தனர்.

தற்போது நடந்துள்ள எலிமினேஷன் ரவுண்டில் ஓவராக அட்ராஸ்சிட்டி செய்துவந்த அபிஷேக் வெளியேற்றப்பட்டார். ஆட்டம் போட்ட அபிஷேக்கிற்கு பிக்பாஸ் சரியான ஆப்பு வைத்தார் என்றே சொல்லலாம். பிரியங்கா தலைமையில் அமைந்த கூட்டணி போட்ட ஆட்டமே இப்போதுதான் ஆடி அடங்கியுள்ளது.

அதற்குள் அடுத்த கூட்டணி உருவாகியுள்ளது. இமான் அண்ணாச்சி, சின்னபொண்ணு, தாமரைச்செல்வி மற்றும் ஜக்கி பெர்ரி ஆகியோர் இணைந்து கூட்டணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் புதிதாக அமைத்த கூட்டணியால் இதர கன்டஸ்டன்ட்ஸ் கடுப்பாகி உள்ளனர்.

பட்டை போட்டு ஊரை ஏமாற்றி வந்த தாமரைச்செல்வி, தற்போது பிக்பாஸ் வீட்டில் வில்லியாக மாற்றியுள்ளார். போட்டியாளர்களில் சிறு வயதினரை அவ்வப்போது கடும் சொற்களால் பேசி மனதை புண்படுத்தி வருகிறார்.

bb5-cinemapettai09
bb5-cinemapettai09

தற்போது தாமரைச்செல்வி இணைந்துள்ள இந்த புதிய கூட்டணி, பிக்பாஸ் வீட்டில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இனி பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் இமான் அண்ணாச்சி, இந்த கூட்டணியில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் இமான் அண்ணாச்சி, தனது பெயரை தானே கெடுத்து வருகிறார் என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த புதிய கூட்டணி அடுத்ததாக என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News