விஜய் தொலைக்காட்சியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் பாரதிகண்ணம்மா அதிக அளவிலான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.
பொதுவாக சீரியல் என்றாலே மாமியார், மருமகள் இடையே மோதல்கள், கூட இருந்தே குழிபறிக்கும் உறவினர் போன்ற கதைகளில் இருந்து மாறுபட்ட கதை கலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தற்போது தனது 600 வது எபிசோடில் அடி எடுத்து வைத்துள்ளது.
சித்தி கொடுமையில் வளர்ந்து வந்த கண்ணம்மாவை கண்டதும் காதல் வயப்படுகிறார் பாரதி. குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்கிறார். மாமியார் சௌந்தர்யா கண்ணம்மாவை மருமகளாக ஏற்க மறுக்கிறார். பல போராட்டங்களை கடந்து கண்ணம்மா தனது புகுந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
மருத்துவர் வெண்பா, பாரதியை ஒரு தலையாக காதல் செய்துவருகிறார். வெண்பாவின் சூழ்ச்சி காரணமாக பாரதி, கண்ணம்மா இருவரும் பிரிந்து விடுகின்றனர். கண்ணம்மாவை சந்தேகிக்கும் பாரதி. கண்ணம்மா தனியாளாக தனது மகள் லட்சுமியை வளர்த்து வருகிறாள்.
தனது குழந்தை என தெரியாமலேயே பாரதி, ஹேமாவை வளர்த்து வருகிறார். பாரதி, கண்ணம்மா ஆகிய இருவரையும் சேர விடாமல் தொடர்ந்து வெண்பா சூழ்ச்சி செய்தே வருகிறார். குடும்பத்தினர் அனைவரும் பாரதியையும், கண்ணம்மாவைவும் சேர்த்து வைக்க முயற்சி செய்து கொண்டே வருவது போல தற்போது கதை நகர்ந்து வருகிறது.
தற்போது 600 வது எபிசோடில் அடியெடுத்து வைத்து புதிய சாதனை படைத்துள்ள பாரதிகண்ணம்மா குழுவினருக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தொடரின் இயக்குனர் பிரவீன் பென்னட் ஜவ்வாக கதையை இழுக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.